by admin on | 2025-11-15 10:08 AM
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில்- அதனை வரவேற்கும் விதமாக ஆண்டிப்பட்டி நகரில் பாஜக நகர, ஒன்றிய அணியினர் மற்றும் மகளிர் அணியினர் சார்பாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இதனை வரவேற்கும் விதமாக
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் ஆண்டிப்பட்டி நகர ஒன்றிய பாஜக கட்சியினர் மற்றும் மகளிர் அணியினர் சார்பாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர், இதற்காக ஆரவாரமாக கோஷம் எழுப்பியபடி எம்ஜிஆர் சிலை அருகே ஊர்வலமாக வந்த பாஜகவினர் ஆண்டிப்பட்டி - தேனி சாலையில் பட்டாசு வெடித்து பேருந்துகள் வாகனங்களில் சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர், தொடர்ந்து பிரதமர் மோடி வாழ்க , பாஜக வாழ்க என கோஷம் எழுப்பி பாஜகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு பொதுமக்கள் ஒவ்வொருவரிடம் இனிப்புகள் கொடுக்கும் போதும் பீகார் மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தனர்.
செய்தியாளர் முத்துக்குமார் தேனி.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!