| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

சட்டவிரோத மது விற்பனை...! 2 பேர் கைது...! 52 பாட்டில்கள் பறிமுதல்...!

by Vignesh Perumal on | 2026-03-19 02:14 PM

Share:


சட்டவிரோத மது விற்பனை...! 2 பேர் கைது...! 52 பாட்டில்கள் பறிமுதல்...!

திண்டுக்கல் நகர் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இரண்டு பேரை நகர் வடக்கு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 52 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், தேர்தல் நேரத்தில் மது விநியோகத்தைத் தடுக்கவும் திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் நகர் துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) கார்த்திக் உத்தரவின் பேரில் தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில், சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் இன்று திண்டுக்கல் நகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆர்.எஸ். ரோடு (R.S. Road) பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் சோதனையில், அவர்கள் மறைத்து வைத்து அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, சிலுவத்தூரைச் சேர்ந்த காளிமுத்து (57), திண்டுக்கல் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த தண்டபாணி (48)

ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 52 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நகர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்குப் பின்னால் உள்ள மொத்த விற்பனையாளர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நகரின் முக்கியப் பகுதியில் நடந்த இந்தத் துரித நடவடிக்கை மதுப்பிரியர்கள் மற்றும் சமூக விரோத கும்பலிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment