| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!

by satheesh on | 2026-03-15 03:43 PM

Share:


என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு  - லாக்ஆன விஜய் !  ஆதவ் போடும் முட்டு கட்டை  ...!!

NDA வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு -  லாக்ஆன விஜய் !  ஆதவ் போடும் முட்டுக்கட்டை  …!!

கரூர் விவரத்தின் போது தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் விஜயை கொண்டு வருவதற்காக பவன் கல்யாண் மூலம் பாஜக தரப்பிலிருந்து பேசப்பட்டு இருந்தது ஆனால் அப்போது விஜய் கூட்டணிக்கு இறங்கி வந்தாலும் அவரை சுற்றி இருக்கக்கூடியவர்கள் முட்டுக்கட்டையாக இருந்தார்கள், இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு திருமண நிகழ்விற்கு வந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அதே திருமண நிகழ்வுக்காக வந்த விஜய்யை சந்தித்து அரசியல் குறித்து பேசி இருக்கிறார். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி பாஜகவின் தூதுவராகவே விஜய் இடம் பேசியதாக தகவல் வெளியாகிறது. குறிப்பாக ஒரே நேரத்தில் மத்தியில் ஆளும் திமுக அரசையும், மாநிலத்தில் ஆளும் பாஜக அரசையும் எதிர்க்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கிய ஜெகன்மோகன் ரெட்டி, பாஜகவை தேவையின்றி பகைத்துக் கொள்ள வேண்டாம் பாஜகவின் உதவி உங்கள் கட்சியை தமிழகத்தில் வளர்ப்பதற்கு தேவைப்படும் என்றெல்லாம் ஜெகன் மோகன் ரெட்டி விஜய்க்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். அந்த வகையில் சமீபகாலமாகவே பாஜகவை நேரடியாக விஜய் விமர்சனம் செய்யாமல் இருப்பதற்கு ஜெகன்மோகன் ரெட்டி அறிவுரையும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய் தனித்துப் போட்டியிட்டால் அவர் நிற்கும் தொகுதியில் மட்டுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, தமிழகத்தில் மற்ற அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை மட்டுமே தழுவுவார் என்றும், அதே நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் விஜய் உள்ளே வரும் பட்சத்தில் விஜய் போட்டியிடும் தொகுதிகளில் சுமார் 80 சதவீதத்திற்கு மேல் வெற்றி பெறுவார் என்ற கருத்துக்கணிப்பு விஜய் கவனத்திற்கு சென்றிருக்கிறது, மேலும் விஜய் கைவசம் இருக்கும் அவருடைய ரசிகர்கள் வாக்குகள், திமுக எதிர்ப்பு வாக்குகளின் ஒரு பகுதி, சிறுபான்மையினர் வாக்கு மற்றும் பட்டியல் சமூகத்தினர் வாக்குகளில், ஒருவேளை பாஜக இருக்கும் கூட்டணிக்கு விஜய் சென்றால் சிறுபான்மையினர் வாக்குகளை மட்டும் தான் விஜய் இலக்க நேரிடும் மற்ற வாக்குகள் விஜய்க்கு முழுமையாக வந்து விடும் என்கின்ற ரிப்போர்ட்டும் விஜய்க்கு சென்றிருக்கிறது. இந்த நிலையில் விஜய் நடித்த ஜனநாயக படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் தடையாக இருக்கிறது, மேலும் கரூர் தொடர்பான சிபிஐ விசாரணை விஜய்க்கு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு தருகிறேன் என்று விஜய் கூவி கூவி அழைத்தாலும் யாரும் கூட்டணிக்கு வராமல் விஜய் தற்பொழுது அரசியலில் தனியாக தத்தளித்து கொண்டிருக்கிறார். இப்படி ஒரு சூழலில் விஜய்க்கு பாஜகவின் உதவி அவசியம் என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது, அந்த வகையில் விஜய் இடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளே வருவதற்கான பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றதாக வெளியான தகவலில், விஜய்க்கு 35 தொகுதிகள் வரை ஒதுக்க தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் தனக்கு துணை முதல்வர் பதவி கேட்கும் பட்சத்தில் அதற்கும் கூட தருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி முன்வர வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இருந்தாலும் விஜய்க்கு எதிரிகள் வெளியே இல்லை விஜயை சுற்றி இருக்கக்கூடிய ஆதவ் அர்ஜுனா, ஆரோக்கியசாமி போன்றவர்கள் தான் விஜய் அரசியலில் இருந்து அட்ரஸ் இல்லாம ஆக போகிறார்கள் என்கிறது அரசியல் வட்டாரங்கள், காரணம் பாஜக இருக்கும் கூட்டணிக்கு விஜய் செல்லவில்லாமல் அவர்கள் விஜய்க்கு முட்டுக்கட்டையாக தற்போது வரை இருந்து வருவதின் பின்னணியில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள், அந்த வகையில் தன்னை சுற்றி இருப்பவர்களின் பேச்சை நிராகரித்துவிட்டு விஜய் சுயமாக சிந்தித்து இந்திய கூட்டணிக்குள் வந்தால் மட்டுமே விஜய்க்கு அரசியல் எதிர்காலம் இருக்கிறது, மற்றபடி விஜய் வரும் சட்டசபை தேர்தலில் எட்டு முதல் 12 சதவீதம் வரை வாக்குகளை வாங்கி தன்னுடைய வாக்கு சதவீதத்தை நிரூபிக்கலாமே தவிர வெற்றி பெற முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.எது எப்படியோ?  வரும் தேர்தல் விஜய்க்கு ஒரு பெரிய சோதனையே!


இணை ஆசிரியர்  : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment