by satheesh on | 2026-03-14 05:21 PM
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு :
திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் Dr. V. சசிமோகன், இ.கா.ப., அவர்கள் இன்று (13.03.2026) தேனி மாவட்டத்திற்கு வருகை தந்து உத்தமபாளையம் மற்றும் போடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அலுவலக பதிவேடுகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் காவல் நிர்வாக செயல்பாடுகள் குறித்து விரிவாக பரிசீலனை செய்யப்பட்டது. மேலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் சட்டம் மற்றும் ஒழுங்கை சிறப்பாக பேணுதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் ஆகியவை குறித்து தேவையான அறிவுரைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!