by admin on | 2026-01-30 06:45 PM
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் இன்று (30.01.2026) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மனிதநேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 நாள் முதல் ஜனவரி 30-ஆம் நாள் வரை மனிதநேய வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மனிதநேயம் என்பது மனிதர்களுக்குள் உள்ள அன்பு, கருணை, பரிவு, சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுகளின் வெளிப்பாடு ஆகும். இத்தகைய உயரிய மனிதப் பண்புகளை சமூகத்தில் மீண்டும் உயிர்ப்பித்து, அனைவரிடமும் மனிதாபிமான சிந்தனைகளை வளர்க்கும் நோக்கில் மனிதநேய வார விழா கொண்டாடப்படுகிறது.
இதன்மூலம், மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வாழ வேண்டிய அவசியம், வேற்றுமைகளை ஒதுக்கி ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டிய முக்கியத்துவம் எடுத்துரைக்கப்படுகிறது. குறிப்பாக சாதி, மதம், மொழி, பாலினம், பொருளாதார நிலை போன்ற வேறுபாடுகள் மனிதநேயத்திற்கு தடையாக இருக்கக் கூடாது என்பதே மனிதநேய வாரத்தின் அடிப்படைச் செய்தியாகும்.மேலும், மனிதநேயம் என்பது சக மனிதர்களிடத்தில் அன்பு காட்டுவது மட்டுமல்ல, பிற உயிர்களிடத்தும் நாம் மனிதநேயத்தினை கடைபிடித்து இரக்கக் குணத்துடன் செயல்பட வேண்டும். இன்றைய வேகமான உலகில் மனிதநேய வாரம் மனித உள்ளங்களில் அன்பையும் கருணையையும் மீண்டும் விதைக்கும் ஒரு முக்கியமான முயற்சியாக விளங்குகிறது. ஒவ்வொரு மனிதரும் மனிதநேயத்தின் மதிப்பை உணர்ந்து, அதை தினசரி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினால், சமுதாயம் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக மாறும்.
மனிதநேய வார விழாவினை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுபோட்டி, கவிதை போட்டி, மாறுவேடப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். ந் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், தேனி-அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் திருமதி ரேணுபிரியா பாலமுருகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் (பொ) திரு.சண்முகசுந்தர், தனி வட்டாட்சியர் (ஆ.தி.ந.) திரு.சரவணபாபு மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்கள் மீது தொடரும் கொலைவெறி தாக்குதல்....!!! தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஹரிகரன் கண்டனம்...!!!
தேனியில் மனிதநேய வார விழா.......!!!!!!!
இலவச நாப்கின் வழங்கல் - அனைத்து பாலினத்தவருக்கும் தனித்தனி கழிவறைகள் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
நிருபர், ஒளிப்பதிவாளர் மீது கொலைவெறித் தாக்குதல்..! முன்னாள் ஜெயக்குமார் கடும் கண்டனம்..!
1700 போலீசார் பாதுகாப்பு..! 100 சிசிடிவி கேமராக்கள்..! போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு..! எஸ்பி ஆய்வு..!