| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

நினைத்தால் ஒரே நாள்..! இல்லையேல் 10 ஆண்டுகள்..! போலீசாரை வறுத்தெடுத்த உயர்நீதிமன்றம்...!

by Vignesh Perumal on | 2026-01-30 03:44 PM

Share:


நினைத்தால் ஒரே நாள்..! இல்லையேல் 10 ஆண்டுகள்..! போலீசாரை வறுத்தெடுத்த உயர்நீதிமன்றம்...!

சென்னை அண்ணாநகரில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், ஆரம்பத்தில் மெத்தனமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், ஒன்றரை ஆண்டுகளாக அதனைச் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்திய காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், காவல்துறையின் இரட்டை நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்: "நீங்கள் நினைத்தால் ஒரு விசாரணையை ஒரே நாளில் முடித்து விடுகிறீர்கள். ஆனால், உங்களுக்கு விருப்பமில்லை என்றால் 10 ஆண்டுகள் ஆனாலும் அந்த விசாரணையை நிலுவையிலேயே வைத்து விடுகிறீர்கள். இதுவா உங்கள் செயல்பாடு?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அண்ணாநகர் சிறுமி வழக்கில் முறையாக விசாரணை நடத்தாத மற்றும் தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகள் (சுமார் 15 மாதங்கள்) கடந்துவிட்ட நிலையிலும், அந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீதிமன்றம் தொடர்ந்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 4-ம் தேதிதான் இது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு விசாரணை அதிகாரியைத் தலைமை அலுவலகம் நியமித்துள்ளது.

சிறுமி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதியில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதிலும், குற்றவாளிகளைக் கைது செய்வதிலும் காவல்துறை அதிகாரிகள் சிலர் அலட்சியம் காட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

"நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் விசாரணை அதிகாரியை நியமிக்க ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படுமா?" என நீதிபதிகள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.

மேலும், பாலியல் வன்கொடுமை போன்ற உணர்வுப்பூர்வமான வழக்குகளில் காவல்துறையின் இத்தகைய போக்கைத் தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யக் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தவறிழைத்த அதிகாரிகள் தப்பிவிடக் கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment