| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

2026 தேர்தல்..! ஆண்டிபட்டியில் மீண்டும் களம் காண்பாரா மகாராஜன்..? மக்கள் எதிர்பார்ப்பு...!

by Vignesh Perumal on | 2026-01-29 02:19 PM

Share:


2026 தேர்தல்..! ஆண்டிபட்டியில் மீண்டும் களம் காண்பாரா மகாராஜன்..? மக்கள் எதிர்பார்ப்பு...!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேனி மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான ஆண்டிபட்டியில் தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ. மகாராஜன் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற குரல் தொகுதி முழுவதும் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் அவர் செய்துள்ள மக்கள் பணிகள் மற்றும் தொண்டர்களுடனான நெருக்கமான உறவே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.திமுக தொண்டர்கள் அல்லது தொகுதி மக்கள் ஒரு பிரச்சனை என்று அவரை நாடினால், நேரம் காலம் பார்க்காமல் நேரில் சென்று உதவி செய்வதை மகாராஜன் வழக்கமாகக் கொண்டுள்ளார்.கட்சித் தொண்டர்களின் இல்லங்களில் நடைபெறும் திருமணம், காதுகுத்து முதல் துக்க நிகழ்வுகள் வரை அனைத்திலும் தவறாமல் கலந்து கொண்டு, ஒரு குடும்ப உறுப்பினரைப் போல அவர்களுக்குத் தோள் கொடுத்து வருகிறார்.


இயற்கை பேரிடர் காலங்களிலும், தனிப்பட்ட கோரிக்கைகளின் போதும் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து உடனுக்குடன் தீர்வுகளைப் பெற்றுத் தந்துள்ளார்.ஆண்டிபட்டித் தொகுதியில் மகாராஜன் அவர்களுக்குக் கட்சியினரைத் தாண்டியும் ஒரு நன்மதிப்பு உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக எதிர் துருவங்களாக இருந்தாலும், உதவி கேட்டு வரும் அதிமுக, அமமுக அல்லது மற்ற கட்சியினருக்கும் எவ்விதப் பாகுபாடும் காட்டாமல் உதவி செய்வதாகப் பொதுமக்கள் பேசிக் கொள்கின்றனர். இதனால் 'அனைவருக்குமான எம்.எல்.ஏ' என்ற பிம்பத்தை அவர் உருவாக்கியுள்ளார்.ஆண்டிபட்டி தொகுதி ஒரு காலத்தில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்டது. ஆனால், இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் எனத் தொடர் வெற்றிகள் மூலம் திமுகவின் பலத்தை இங்கு நிலைநாட்டியவர் மகாராஜன்."தொண்டர்களை மதிக்கும் ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டால், தொகுதியை எளிதாகத் தக்க வைத்துக் கொள்ளலாம்" என்பதே உள்ளூர் திமுக நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.தொகுதியில் நிலுவையில் இருந்த பல அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதால், பொதுமக்களும் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதை வரவேற்கும் மனநிலையில் உள்ளனர்.ஆண்டிபட்டித் தொகுதியில் திமுக தலைமை மீண்டும் மகாராஜன் அவர்களுக்கு வாய்ப்பளிக்குமா அல்லது புதிய வியூகங்களை வகுக்குமா என்பது வரும் காலங்களில் தெரியவரும். எனினும், தற்போதைய நிலவரப்படி 'ஆண்டிபட்டி கோட்டையின் அசைக்க முடியாத வேட்பாளராக' மகாராஜன் உருவெடுத்துள்ளார்.



நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment