by Vignesh Perumal on | 2026-01-30 04:08 PM
வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் 155-வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வரும் பிப்ரவரி 1 (01.02.2026) மற்றும் பிப்ரவரி 2 (02.02.2026) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இவ்விழாவைக் காணச் சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கடலூர் மாவட்ட காவல்துறை மிக விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) S. ஜெயக்குமார் IPS அவர்களின் நேரடி மேற்பார்வையில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (ADSP - கோடீஸ்வரன், ரகுபதி, திருமால், தினகரன்) தலைமையில், 14 டிஎஸ்பிக்கள், 50 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1,700 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல்களைத் தடுக்கவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் 100 இடங்களில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும்,10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.
பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக நான்கு முக்கிய மார்க்கங்களில் தற்காலிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடலூர் மார்க்கம் ஆண்டிக்குப்பம் புதிய பைபாஸ் (வலது மற்றும் இடதுபுறம்), பண்ருட்டி மார்க்கம் அகர்வால் பேக்கரி வழியாக ராகவேந்திரா சிட்டி, சேத்தியாதோப்பு மார்க்கம் வடலூர் RC காலனி அருகில் அஞ்சலை அம்மாள் கார்டன் & RC பள்ளி, விருத்தாசலம் மார்க்கம், மேட்டுக்குப்பம் ஆர்ச் - விவேகானந்தா பாலிடெக்னிக் & வீணங்கேணி.
இந்த வாகன நிறுத்தங்களிலிருந்து சன்மார்க்க அன்பர்கள் ஞானசபைக்குச் செல்ல தற்காலிகப் பேருந்துகள், மினி பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படும். ஜனவரி 30 இரவு 10:00 மணி முதல் பிப்ரவரி 1 இரவு 11:00 மணி வரை பேருந்துப் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
குறிஞ்சிப்பாடி, மருவாய், மேட்டுக்குப்பம் ஆர்ச், மந்தாரக்குப்பம், ஆண்டிக்குப்பம் வழியாகச் செல்ல வேண்டும்.
மந்தாரக்குப்பம், நெய்வேலி டவுன்ஷிப், நெய்வேலி ஆர்ச்கேட், கொள்ளுக்காரன்குட்டை, கோ.சத்திரம், குள்ளஞ்சாவடி வழியாகச் செல்ல வேண்டும்.
பண்ருட்டி, கொள்ளுக்காரன்குட்டை, கோ.சத்திரம், மீனாட்சிபேட்டை, குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், மருவாய், சேத்தியாதோப்பு வழியாகச் செல்ல வேண்டும்.
மேற்கண்ட அதே வழியில் (சேத்தியாதோப்பு - பண்ருட்டி மார்க்கமாக) திரும்பிச் செல்ல வேண்டும்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கப் பொதுமக்கள் இந்த மாற்று வழித்தடங்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தைப்பூச நாளன்று கனரக வாகனங்கள் கண்டிப்பாக மாற்றுப் பாதையையே பயன்படுத்த வேண்டும்.
கூட்ட நெரிசலில் திருட்டு சம்பவங்களைத் தவிர்க்கப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், சந்தேகப்படும்படி யாராவது இருந்தால் உடனடியாக போலீசாரிடம் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட காவல்துறையின் இந்த விரிவான ஏற்பாடுகள், லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி வள்ளலார் ஜோதி தரிசனத்தைக் கண்டு செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
செய்தியாளர்கள் மீது தொடரும் கொலைவெறி தாக்குதல்....!!! தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஹரிகரன் கண்டனம்...!!!
தேனியில் மனிதநேய வார விழா.......!!!!!!!
இலவச நாப்கின் வழங்கல் - அனைத்து பாலினத்தவருக்கும் தனித்தனி கழிவறைகள் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
நிருபர், ஒளிப்பதிவாளர் மீது கொலைவெறித் தாக்குதல்..! முன்னாள் ஜெயக்குமார் கடும் கண்டனம்..!
1700 போலீசார் பாதுகாப்பு..! 100 சிசிடிவி கேமராக்கள்..! போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு..! எஸ்பி ஆய்வு..!