| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

விருதுநகரில் பரபரப்பு..! 3.0 ரிக்டர் அளவு பதிவு..! மக்கள் வீதிகளில் தஞ்சம்..!

by Vignesh Perumal on | 2026-01-30 12:21 PM

Share:


விருதுநகரில் பரபரப்பு..! 3.0 ரிக்டர் அளவு பதிவு..! மக்கள் வீதிகளில் தஞ்சம்..!

விருதுநகர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு திடீரென லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய நில அதிர்வியல் மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு (ஜனவரி 29, 2026) சரியாக 9:06 மணியளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவானது. சிவகாசிக்கு மேற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் (9.44° வடக்கு அட்சரேகை, 77.71° கிழக்கு தீர்க்கரேகை) நில அதிர்வின் மையப்புள்ளி அமைந்திருந்தது. நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த அதிர்வு உருவானது.

விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் இந்த அதிர்வை வெளிப்படையாக உணர்ந்தனர்.

விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர். ராஜபாளையம், சாத்தூர், கிருஷ்ணன்கோவில், கம்மாபட்டி. அண்டை மாவட்டமான தென்காசியில் உள்ள சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

இரவு நேரத்தில் அமைதியாக இருந்த வேளையில், திடீரென வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டதாலும், ஜன்னல் கதவுகள் பலமாக அதிர்ந்ததாலும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நிலநடுக்கம் என அச்சமடைந்த பொதுமக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர்.

குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு முறை லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதிகளில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.

இந்த நில அதிர்வால் இதுவரை எவ்வித உயிரிழப்புகளோ அல்லது கட்டிடச் சேதங்களோ ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment