| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

இளம் பெண் பாலியல் வன்கொடுமை - 3பேர் கைது - கல்லூரி கேண்டினில் நடந்த கொடூரம் !

by satheesh on | 2026-01-30 09:45 AM

Share:


இளம் பெண் பாலியல் வன்கொடுமை  - 3பேர் கைது -  கல்லூரி கேண்டினில் நடந்த கொடூரம்  !

இளம் பெண் பாலியல் வன்கொடுமை - சென்னை அரசு கல்லூரி கேன்டீனில் நடந்த கொடூரம் - 3 பேர் கைது  ;

சென்னை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீனில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம். கேன்டீன் உரிமையாளர், அவரது நண்பர், மற்றும் ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை. சென்னையில் அரசு கல்லூரி ஒன்றின் வளாகத்தில் கோட்டூரை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 11 ஆண்டுகளாக கேன்டீன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் செல்வம் நடத்தி வரும் கேன்டீனில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீனில் இருபது நாட்களாக இளம்பெண் வேலை பார்த்து வரும் நிலையில் நேற்று புதிதாக புதுக்கோட்டையை சேர்ந்த குணசேகர்(57) என்பவர் அதே கேன்டீனில் மாஸ்டர் வேலைக்கு பணிக்கு சேர்ந்துள்ளார். பணிக்கு சேர்ந்த முதல் நாளே மாஸ்டர் குணசேகர் கேன்டீனில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணை கல்லூரி வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு செய்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் கத்தி கூச்சலிடவே, அங்கிருந்த சிலர் இளம்பெண்ணை மீட்டு குணசேகரை பிடித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாஸ்டர் குணசேகரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் பெண்கள் - குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் முன்பு கவுன்சிலிங்காக ஆஜர்படுத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் ஏற்கனவே அவருக்கு திருமணமாகி கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு திருமணமான இரண்டே மாதத்தில் கணவரை பிரிந்து கும்பகோணத்திற்கு சென்று தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து சென்னை வந்த இளம்பெண் 20 நாட்களுக்கு முன்பு செல்வம் கேன்டீனில் பணிக்கு சேர்ந்ததும் அப்போது கேண்டீன் உரிமையாளர் செல்வம் பெண்ணிடம் ஆசையாக பேசி தனது வலையில் விழ வைத்து பாலியல் வன்கொடுமைக்கு செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி கேண்டீன் உரிமையாளர் செல்வத்தின் நண்பர் கார்த்திக் என்பவரும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவர்களை தொடர்ந்து மாஸ்டர் குணசேகர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சைதாப்பேட்டை போலீஸார் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேண்டீன் உரிமையாளர் செல்வம், அவரது நண்பர் கார்த்திக், கேண்டீன் ஊழியர் குணசேகர் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் ‌.

இணை ஆசிரியர்  ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment