| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

அரசியலில் திடீர் திருப்பம்...! அருமை அண்ணன் எடப்பாடி, ஓபிஎஸ் பேட்டி...! டிடிவி புதிய அசைன்மென்ட்...!

by Vignesh Perumal on | 2026-01-29 01:28 PM

Share:


அரசியலில் திடீர் திருப்பம்...! அருமை அண்ணன் எடப்பாடி, ஓபிஎஸ் பேட்டி...! டிடிவி புதிய அசைன்மென்ட்...!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த ஓ.பன்னீர்செல்வம், இன்று தனது போக்கை முற்றிலும் மாற்றிக்கொண்டுள்ளார். பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அவர் அளித்த பேட்டியில், கடந்த சில ஆண்டுகளாக இபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்து வந்த ஓபிஎஸ், இன்று அவரை "அருமை அண்ணன்" என்று அழைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதிமுகவின் நலனுக்காகத் தன்னைப் மீண்டும் கட்சியில் இணைத்துச் செயல்பட வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தான் தயாராக இருப்பதாகவும், அதற்குப் பழைய கசப்புகளை மறக்கத் தயார் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

அதிமுகவில் இணைய வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்ற, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு பாலமாகச் செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

"அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதில் டிடிவி தினகரனுக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. எனவே, என்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துச் செயல்பட வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அதிமுக தலைமையிடம் அவர் வலியுறுத்த வேண்டும்," என ஓபிஎஸ் கூறினார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டது குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

"தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை உலகுக்கு நிரூபிக்கவே நான் ராமநாதபுரத்தில் போட்டியிட்டேன். அது பதவிகளுக்கான போட்டி அல்ல; தொண்டர்களின் ஆதரவை உறுதி செய்வதற்கான களம்," என்றார்.

"எனக்கு என்று தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் துளிகூட இல்லை. அதிமுகவே எனது தாய் கழகம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போதைக்குக் கட்சியின் ஒற்றுமையே முதல் இலக்கு."

ஓபிஎஸ்-ஸின் இந்தப் பேச்சு, எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு 'செக்' ஆகப் பார்க்கப்படுகிறது. ஒருபுறம் தன்னைத் தாழ்த்திக் கொண்டு ஒற்றுமை பேசும் ஓபிஎஸ், மறுபுறம் டிடிவி தினகரனைத் தூதுவராக நியமிப்பதன் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியான அழுத்தத்தைக் கொடுக்க முயல்கிறார்.








நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment