| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

இலவச நாப்கின் வழங்கல் - அனைத்து பாலினத்தவருக்கும் தனித்தனி கழிவறைகள் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

by satheesh on | 2026-01-30 06:42 PM

Share:


இலவச நாப்கின் வழங்கல்  - அனைத்து பாலினத்தவருக்கும் தனித்தனி கழிவறைகள்  - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு  !

மாதவிடாய் சுகாதாரம் என்பது பெண்களின் அடிப்படை உரிமை ;

அனைத்துப் பள்ளி மாணவிகளுக்கும் இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும் என நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு. மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமை. மாதவிடாய் சுகாதாரம் என்பது அரசியலைப்புப் பிரிவு 21-ன் படி பெண்களின் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பபு. அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு நாப்கின்கள் இலவசமாக வழங்குவதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம்| உத்தரவு. நாப்கின்களை இலவசமாக வழங்கத் தவறும் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை.

தனிக்கழிப்பறை ;

நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு தனிக் கழிப்பறைகளை ஏற்படுத்தி தர வேண்டும்.அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறை இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்" -உச்ச நீதிமன்றம் உத்தரவு.

இணை ஆசிரியர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment