by satheesh on | 2026-01-29 07:02 PM
கூட்டணி உறுதி - டெல்லியில் MP கனிமொழி ;
திமுக எம்பி கனிமொழி அவர்கள் இன்று 10 ஜனபத் இல்லத்திற்குச் சென்று காங்கிரஸ் மேலிடத்தைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி அமைப்பதில் கொள்கை அளவில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இரு தரப்புமே இணைந்து செயல்படத் தயாராக உள்ளனர். அதிகாரப் பகிர்வு (Power Sharing): இந்த முறை காங்கிரஸ் கட்சி வெறும் இடங்களை மட்டும் எதிர்பார்க்காமல், ஆட்சியில் அல்லது அதிகாரப் பகிர்வில் மிகத் தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது. கடந்த காலங்களை விட இந்தத் தடவை காங்கிரஸ் தங்களின் பங்கைப் அதிகமாக பெறுவதில் உறுதியாக உள்ளனர். இன்றைய சந்திப்பிற்குப் பிறகு, எந்தெந்த இடங்கள்? யாருக்கு எவ்வளவு பங்கு? போன்ற விஷயங்களில் நிலவும் குழப்பங்கள் நீங்கி, முழுமையான தெளிவு பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரம் கேட்கும் காங்கிரஸ் - ஒற்றை ஆட்சி சொல்கிறது திமுக!
தமிழ்நாட்டில் அதிகாரப் பகிர்வு (Power Sharing) குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து முன்வைத்த நிலையில், திமுக ஒற்றைக் கட்சி ஆட்சி என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. டெல்லியில் நடைபெற்ற சந்திப்பில், ராகுல் காந்தி – திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி இடையே இந்த விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை நன்றாக நடைபெற்றது. ஆனால் அதிகாரப் பகிர்வு அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தும்” என்று திமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இரு தலைவர்களும் “தீர்க்கப்பட வேண்டிய விவகாரங்கள்” குறித்து பேசினாலும், காங்கிரஸுக்கு வழங்கப்படும் சீட்களின் எண்ணிக்கை குறித்து விவாதம் நடைபெறவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு 25 சீட்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை 2 சீட்கள் கூடுதல் வழங்க திமுக தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது ஏற்கனவே இரு கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது. சீட்கள் அதிகரிப்பு குறித்து ராகுல் காந்தி நேரடியாக கேட்கவில்லை; ஆனால் அதிகாரப் பகிர்வு சாத்தியமா என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் சீட் பகிர்வு குறித்து பேச திமுக இன்னும் குழு அமைக்காதது ஏன் என்றும், அதை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தினார். காங்கிரஸின் நிலைப்பாடு: அதிக சீட்களும், அதிகாரப் பங்கும் அவசியம் என்ன கூறப்படுகிறது.
இணை ஆசிரியர் ; N. சதீஷ்குமார். பெரியகுளம். தேனி.
செய்தியாளர்கள் மீது தொடரும் கொலைவெறி தாக்குதல்....!!! தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஹரிகரன் கண்டனம்...!!!
தேனியில் மனிதநேய வார விழா.......!!!!!!!
இலவச நாப்கின் வழங்கல் - அனைத்து பாலினத்தவருக்கும் தனித்தனி கழிவறைகள் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
நிருபர், ஒளிப்பதிவாளர் மீது கொலைவெறித் தாக்குதல்..! முன்னாள் ஜெயக்குமார் கடும் கண்டனம்..!
1700 போலீசார் பாதுகாப்பு..! 100 சிசிடிவி கேமராக்கள்..! போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு..! எஸ்பி ஆய்வு..!