by Vignesh Perumal on | 2026-01-29 12:43 PM
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் காரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் எரிவாயு சிலிண்டர்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகர் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், டவுன் டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் தெற்குப் போலீசார் மற்றும் தனிப்படையினர் இன்று பேகம்பூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை மறித்துப் போலீசார் சோதனை செய்தனர். அந்தச் சோதனையில் காரினுள் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 1,000 கிலோ (1 டன்) அரிசி. சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட கேஸ் சிலிண்டர்கள் மற்றும் எரிவாயுவை நிரப்பப் பயன்படும் பம்ப். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதையடுத்து, காரில் இருந்த திண்டுக்கல் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது சௌக்கான் சேட் (23) என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
இருப்பினும், போலீசாரைக் கண்டதும் காரில் இருந்த மேலும் இருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரேஷன் அரிசியைச் சட்டவிரோதமாகப் பதுக்குபவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!