by satheesh on | 2026-01-28 05:19 PM
தேவதானப்பட்டி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். பெரியகுளம் வடக்குபூந்தோட்டத்தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார்(33). இவர் கோவையில் தனது குடும்பத்துடன் வசித்து தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் பெரியகுளத்தில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள குடும்பத்துடன் காரில் வந்துள்ளார். பின்னர், நேற்று முன் தினம் இரவு காரில் கோவைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது காட்ரோடு முனீஸ்வரன் கோவில் அருகே செல்லும் போது எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் வந்த விஜயகுமார், அவரது மனைவி மீனா(31), மகள் பூமிகாஸ்ரீ(9) இரண்டு வயது குழந்தை மற்றும் உறவினர் ராமசாமி(58), கணி(52) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய மற்றொரு கார் டிரைவர் காமேஸ்வரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சாலையில் அதிக அளவு வளைவுகளும், குறுகிய பாலங்களும், போதிய ஒளிரும் பட்டைகள் பொருத்தப்படாதாலும் தொடர் விபத்துகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. சபரிமலை சீசனில் மட்டும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது எனவே தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இணை ஆசிரியர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"
எச்சில் பாட்டில்களை வாங்க மாட்டோம் ! பணியாத பணியாளர்கள் - பிடிவாதம் பிடிக்கும் நிர்வாகம் !!