| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

காவல் நிலையத்தில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை...!!!

by admin on | 2025-10-11 11:45 AM

Share:


காவல் நிலையத்தில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை...!!!

*முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஓட்டல் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை*


தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில், சொந்த பிரச்னையின் போது பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை வாங்கச் சென்ற ஓட்டல் உரிமையாளர் தூத்துக்குடி, முள்ளக்காடு, காந்தி நகரை சேர்ந்த சுவிசேஷராஜ் (42). மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு, ஸ்டேஷனுக்குள் உடலில் தீ கொழுந்து விட்டு எரிய நடந்தே சென்றார். இதைப் பார்த்து பதறிய போலீசார் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அவரை மீட்டனர். பின்னர் மயங்கிச் சரிந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சுவிசேஷராஜ் உயிர் இழந்தார் இதுகுறித்து தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான், ஏஎஸ்பி மதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்தியாளர்கள் பாலாஜி , கதிரேசன் பழனி

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment