by Vignesh Perumal on | 2026-05-11 09:52 PM
திண்டுக்கல் அருகே அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கார் மெக்கானிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் மாலப்பட்டி, அபிராமி நகரைச் சேர்ந்தவர் தமிழரசன். இவருடைய மகன் லெனின்பிரபாகரன் (35). கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த இவர், தனது இருசக்கர வாகனத்தில் தோட்டனூத்து - திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு எதிரே வந்த அரசு பேருந்து, எதிர்பாராத விதமாக லெனின்பிரபாகரனின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. ஜான்கென்னடி என்பவர் ஓட்டி வந்த அந்த அரசு பேருந்து, மிக அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இயக்கப்பட்டதே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
பேருந்து மோதிய வேகத்தில் லெனின்பிரபாகரன் தனது வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, சாலையில் விழுந்தார். இதில் அவருக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார், லெனின்பிரபாகரனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அரசு பேருந்து ஓட்டுநர் ஜான்கென்னடி மீது அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த மெக்கானிக் லெனின்பிரபாகரனுக்குக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ள நிலையில், இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
புகையிலை பொருட்கள் அழிப்பு....!!!"
டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு..! இரு வாரங்களில் அமல்...!
இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி..! பரிதாப பலி...!
அமைச்சர் கீர்த்தனா..! பதவி ஏற்பில் சிக்கல்...! அனுமதி மறுத்த பேரவைச் செயலாளர்...! பரபரப்பு...!
கொடூரம்...! இரு இளைஞர்கள் எரித்துக் கொலை...! அரை கிலோமீட்டர் இடைவெளியில் சடலங்கள் மீட்பு..!