by admin on | 2026-06-26 05:36 PM
ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் அமைந்துள்ள பழமையான கோகுல கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு வழிபட்டனர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள திம்மரச நாயக்கனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோகுலகிருஷ்ணன் கோவில் உள்ளது
இக்கோவிலில் கடந்த 2014 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற ஆகம விதிப்படி இன்று விழா நடைபெற்றது
முன்னதாக கடந்த ஆறு மாத காலமாக கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன
முழுமையான பணிகள் முடிவு பெற்ற நிலையில் வளர்பிறை துவாதசி தினமான இன்று வெள்ளிக்கிழமை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
முன்னதாக மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்று கடங்கள் புறப்பாடாகி கோவில் கலசத்தில் 108 புண்ணிய தீர்த்தங்களில் இருந்து சேகரித்துக் கொண்டு வரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது
இதையடுத்து கோவில் கும்பாபிஷேகத்தை காண வந்திருந்த பக்தர்கள் மீது தீர்த்தங்கள் தெளித்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றதுஇதையடுத்து கோவிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது
இதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் நடைபெற்றது
கும்பாபிஷேக விழாவில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டதால் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்