by admin on | 2026-06-13 11:51 AM
*ஒன்றிய அரசின் அனுமதி பெற்று இரண்டு மாதங்களில் வைகை அணையை தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணையில் ஆய்வு மேற்கொண்ட மின்சாரதுறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி*
*உரிய அனுமதியுடன் வேளாண் பயன்பாட்டிற்காக வைகைஅணையில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் அள்ளி கொள்ளலாம் என்றும் மாறாக வணிக பயன்பாட்டிற்காக எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதனை தேனி மாவட்ட ஆட்சியர் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என்றும் பேட்டி*
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையை தூர்வாருவது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் வைகை அணையில் ஆய்வுஉரிய முறையில் ஆய்வு நடத்தி மத்திய அரசின் அனுமதி பெற்று இரண்டு மாதங்களில் அணையை தூர் வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நீர்த்தேக்க பகுதியில் தேங்கியுள்ள வண்டல் மண்களை விவசாயிகள் கட்டணமின்றி அள்ளிக் கொள்ளலாம் என்றும் வியாபார நோக்கத்தோடு வண்டல் மண்ணை அல்ல முயற்சி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேகமலை வனப்பகுதியில் இயற்கை வளங்கள் பாதிக்கப்படாத பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு வீட்டு மனைபட்டாக்கள் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்உரிய அனுமதியுடன் வேளாண் பயன்பாட்டிற்காக வைகை அணையில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் அள்ளிக் கொள்ளலாம்.மாறாக வணிக பயன்பாட்டிற்காக எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர் இதனை கண்காணிக்க வேண்டும். மேலும் சின்னமனூர், கம்பம் பகுதிகளில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இயற்கை வளங்கள் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், வசனங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் உள்ள மேகமலை விவசாயிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கும் ஆய்வுப் பணிகள் நடக்கிறது. மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். என்று கூறினார்.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !