| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

விபரங்கள் இல்லாத ரசீது - வழக்கு ! ஆணையாளருக்கு பிடிவாரென்டு.!!

by satheesh on | 2026-06-16 02:03 PM

Share:


விபரங்கள் இல்லாத ரசீது - வழக்கு !  ஆணையாளருக்கு பிடிவாரென்டு.!!

"ரூ.100 கட்டணம் வசூலித்த கோவில்... ரசீதில் கையொப்பம், GST எண் இல்லை என கேள்வி கேட்ட வழக்கறிஞர்.! இறுதியில் நகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட்!" - பரபரப்பை ஏற்படுத்திய ராமேஸ்வரம் சம்பவம்!             

திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகர், கடந்த 13.02.2022 அன்று ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றபோது நகராட்சி சார்பில் ரூ.100 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வழங்கப்பட்ட ரசீதில் நகராட்சி ஆணையரின் கையொப்பம், கட்டணம் வசூலித்தவரின் கையொப்பம் மற்றும் GST எண் ஆகியவை இடம்பெறவில்லை என அவர் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறி, வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் ஆணையத் தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர், கடந்த 05.08.2025 அன்று மனுதாரருக்கு மன உளைச்சலுக்காக ரூ.20 ஆயிரம் நஷ்டஈடும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரமும் வழங்க ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர். மேலும், 45 நாட்களுக்குள் இந்தத் தொகையை வழங்கத் தவறினால் 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், ஆணையத்தின் உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி, வழக்கறிஞர் பிரபாகர் செயலாக்க மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத் தலைவர் ஒய். கிளாட்ஸ்டன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் எம். கனகசபாபதி ஆகியோர், ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் தமிழகத்தில் உள்ள கோயில்களில் இதுபோன்ற கட்டண வசூல், பார்க்கிங் கட்டணம், சிறப்பு தரிசன கட்டணம், ரசீது வழங்கும் முறை உள்ளிட்ட விஷயங்களில் ஏதேனும் சிக்கல்களை சந்தித்தது உண்டா?எந்த கோயிலில் என்ன அனுபவம் ஏற்பட்டது?உங்களுக்கு வழங்கப்பட்ட ரசீதுகளில் முழுமையான விவரங்கள் இருந்ததா?  இந்த நடவடிக்கை, ரூ.100 கட்டணத்திற்காக நேரடியாக எடுக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கை அல்ல; நுகர்வோர் ஆணையம் வழங்கிய இழப்பீட்டு உத்தரவு நிறைவேற்றப்படாததையடுத்து எடுக்கப்பட்ட செயலாக்க நடவடிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment