by satheesh on | 2026-06-17 04:56 PM
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பத்மநாபபுரம் அரண்மனையை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ். ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசியாவிலேயே முழுமையாக மரத்தால் கட்டப்பட்ட அரண்மனையாக விளங்கும் பத்மநாபபுரம் அரண்மனை பல நூற்றாண்டுகளாக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் நிலையில், போதிய பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் அதன் பொலிவு குறைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கோரிக்கை மனுவை கேரள முதலமைச்சர் வி.டி. சதீசனை நேரில் சந்தித்து ஆர்.எஸ். ராஜன் வழங்கினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரண்மனையை பாதுகாக்க கேரள அரசு உடனடியாக நிதி ஒதுக்கி, பழமைத் தன்மையை பாதிக்காமல் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !