by satheesh on | 2026-06-16 01:31 PM
திண்டுக்கலில் ஸ்பா மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஹைடெக் விபச்சாரம் - தட்டி தூக்கிய போலீஸ்.!
திண்டுக்கல் நகர்பகுதியில் உள்ள ஸ்பா மசாஜ் சென்டர் என்ற மறைமுகமாகவும், நவீன யுக்திகளுடன், புதிய பாணியில் ஹைடெக் முறையில் விபசாரம் நடைபெற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அந்த ஆய்வில் விபச்சாரம் நடைபெற்றது தெரிய வந்ததையடுத்து, அதில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பெண்கள் மீட்கப்பட்டனர். அங்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவரது உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகரில் சில மசாஜ் சென்டர்களில் விதிமீறல் நடப்பதாக ரகசிய தகவலின் படி நகர் துணை காவல் கண்காணிப்பாளர். கார்திக் மேற்பார்வையில், நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர். மீனாட்சி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார்,சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுடன் அக்ரஹார சாலை, மங்கை டவரில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில், அங்கு அழகிகளை வைத்து ஹைடெக் முறையில் விபசார தொழில் நடத்தப்பட்டது தெரியவந்தது. ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது விசாரணையில் அம்பலமானது.இதையடுத்து, இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சென்னை கிண்டியைச் சேர்ந்த பத்மா வயது 37, திண்டுக்கல் முருகபவனத்தைச் சேர்ந்த சுரேஷ் வயது 44, வடமதுரை வேல்வார்கோட்டையைச் சேர்ந்த சாமிநாதன் வயது 50 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த பெண்களையும் மீட்டு,மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைதான மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் காவல் துறையினரின் கண்களை கட்டி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி , காவலர்களின் நண்பராக வலம் வரும் சிலர் மாமூல் பெற்றுகொண்டும், சிலர் மாமூல் வசூல் செய்து கொடுத்து வருவதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !