| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!

by satheesh on | 2026-06-18 05:42 PM

Share:


மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!

மனைவி, கள்ளக்காதலனுக்கு அரிவாள் வெட்டு: கணவனுக்கு போலீஸ் வலை

கோவை மாவட்டம், அன்னூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய அன்பு மலர் என்பவருக்கும், டாக்ஸி ஓட்டுநரான முருகானந்தம் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் அடிக்கடி நிகழ்ந்த வாக்குவாதம் காரணமாக, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அன்பு மலர் தனது கணவரைப் பிரிந்து அன்னூர் கூத்தாண்டவர் கோவில் வீதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். எனினும், முருகானந்தம் அவ்வப்போது அன்பு மலரின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இவற்றுக்கு இடையே, அன்பு மலரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற அவரது உறவினரான 32 வயதுடைய மோகன் குமார் என்பவருடன் அன்பு மலருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. முருகானந்தம் இதனைத் தடுத்தும் அன்பு மலர் தொடர்ந்து மோகன் குமாருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முருகானந்தம் அன்பு மலரின் வீட்டிற்குச் சென்றபோது, அங்குக் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மோதல் வெடிக்கும் விதமாக, அன்பு மலரும் மோகன் குமாரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர்.  இதனால் கடும் ஆத்திரமடைந்த முருகானந்தம், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இருவரையும் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இருவரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு முதலில் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள மருத்துவமனையிலும் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடித் தலைமறைவாக இருக்கும் முருகானந்தத்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் உள்ளேயே புகுந்து நடத்தப்பட்ட இந்த அரிவாள் வெட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment