by satheesh on | 2026-06-17 05:06 PM
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் ரூ.2.65 கோடி மோசடி நடைபெற்ற வழக்கில் வங்கி எழுத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சிவனேஸ்வரி உள்ளிட்ட 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் கடந்த 2017 முதல் 2024 வரை தங்க நகைகளை அடகு வைத்தது போன்று போலி பதிவுகள் செய்து ரூ.2.65 கோடி மோசடி நடைபெற்றது தணிக்கையின் போது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சங்க துணைப் பதிவாளர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக வங்கியின் முன்னாள் செயலாளர் சகாய திலக்ராஜ், வங்கி எழுத்தர்கள் முத்துகிருஷ்ணன் மற்றும் சிவனேஸ்வரி, சகாய திலக்ராஜின் மனைவி பார்வதி, உறுப்பினர் இசை பிரதீப் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆரல்வாய்மொழி தெற்கு ஊரைச் சேர்ந்த வங்கி எழுத்தர் முத்துகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கோட்டாறு குலாலர் தெருவைச் சேர்ந்த சிவனேஸ்வரி உள்ளிட்ட மற்ற 6 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !