by satheesh on | 2026-06-26 08:08 AM
கோவை : வடவள்ளி பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண், தனது கணவர் அருணைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அவருக்கு ஆட்டோ டிரைவர் ராஜதுரையுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் தனிமைக்கு 6 வயது மகன் அபிஷேக் இடையூறாக இருப்பதாகக் கருதி, கரண்டியைக் சூடுபடுத்தியும் கட்டையாலும் அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து வந்துள்ளனர். ஒருமுறை தனது தந்தையிடம், “அம்மாவும் அங்கிளும் என்னை அடிக்கிறாங்க, என்னை உங்களுடனே கூட்டிட்டு போயிடுங்கப்பா” என்று அந்தச் சிறுவன் கதறி அழுதுள்ளான்.. கடந்த 2020ஆம் ஆண்டு, சாய்பாபா காலனி பகுதியில் வைத்து ராஜதுரையும் திவ்யாவும் சேர்ந்து அந்தச் சிறுவனை குச்சியால் கொடூரமாகத் தாக்கியதில் சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதி விவேகானந்தன் அதிரடி தீர்ப்பளித்துள்ளார். சிறுவனைக் கொன்ற கள்ளக்காதலன் ராஜதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தன் சொந்த மகனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய தாய் திவ்யாவுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !