by satheesh on | 2026-06-19 04:47 PM
போதையில் கார் ஓட்டி விபத்து : பெரியகுளம் முன்னாள் நகராட்சி கமிஷனர் கைது :
மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய, 'சஸ்பெண்ட்’ ஆன மாநகராட்சி அதிகாரியை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் அடுத்த மங்கலம் அருகே ஜூன் 10 ம் தேதி இரவு, ஒருவர் டூ வீலரில் ரோட்டை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதி காயமடைந்தார். காரை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மங்கலம் போலீசாரின் விசாரணையில்,கார் ஓட்டியவர், கோவை மாவட்டம், சூலுாரை சேர்ந்த சரவணகுமார், 49, என்பதும், சரவணகுமார் துாத்துக்குடி மாநகராட்சிதுணை கமிஷனராக பணியாற்றி, மூன்று மாதங்கள் முன், சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இவர், நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றியவர். பின்னர் தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய போது, பயோ மைனிங் குப்பை ஒப்பந்தத்தில், அரசுக்கு, 9.57 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். விபத்தை ஏற்படுத்திய சரவணகுமாரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடல் நலம் சரியில்லாததால், நீதிமன்ற உத்தரவில், கோவை அரசு மருத்து வமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பெரியகுளம் நகராட்சி கமிஷனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!
கஞ்சா பறிமுதல் எட்டு பேர் கைது....!!!
வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது ! பெண் உட்பட 6 பேருக்கு போலீஸ் வலை வீச்சு. !!