| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கஞ்சா பறிமுதல் நான்கு பேர் கைது....!!!

by admin on | 2026-06-09 05:38 PM

Share:


கஞ்சா பறிமுதல் நான்கு பேர் கைது....!!!

*சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெண் உட்பட 03 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 56 Kg கஞ்சாவை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்* 


திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய சரகம் மாங்கரை, கொட்டாரப்பட்டி, அம்மாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ரெட்டியார்சத்திரம் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து நடத்திய சோதனையில் நேற்று 08.06.2026 ம் தேதி அம்மாபட்டி கிராமத்தில் வசித்து வரும் ஜெயபால் (45) த.பெ. முத்து என்பவரின் தோட்டத்தில் தணிக்கை செய்ய மேற்படி தோட்டத்தில் 56 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு  எதிரிகள் 1)ஜெயபால் மற்றும் அவரது மனைவி 2)நந்தினி (37) மற்றும் இதில் தொடர்புடைய மற்றொரு எதிரான 3)செய்யது காட்டுபாவா (31) த.பெ. அப்துல் ரஹ்மான், சமுத்திராப்பட்டி, நத்தம் ஆகியோரை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உள்ளனர்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment