by satheesh on | 2026-06-09 06:34 PM
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார் :
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். விழாவில் முதலமைச்சர் விஜய்க்கு பெண் காவலர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையையும் அவர் வெளியிட்டார். மேலும், இந்த அதிரடிப்படைக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக வாகனத்தையும் தொடங்கி வைத்து, அதனை நேரில் இயக்கிப் பார்த்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவசர சூழ்நிலைகளில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த சிறப்புப் படை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “ஒருசில நிகழ்ச்சிகள்தான் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். இந்த நிகழ்வும் அப்படிப்பட்ட ஒன்றுதான். நம் வீட்டில் பாட்டி, அம்மா, அக்கா, தங்கை என ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் முக்கிய பொறுப்பு. பெண்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்குவதற்காக இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
போதைப்பொருளை வேரோடு அகற்ற வேண்டும்: விஜய் பேச்சு :
பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்க்கும்போது மனம் வலிக்கிறது; கண் கலங்குகிறது; பெண்களுக்கு எதிரான இந்த குற்றங்களுக்கு காரணம், போதைப்பொருள் நடமாட்டம்தான் போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டதால்தான், போதைப்பொருள் நடமாட்டம் பரவிவிட்டது.
பெண்களின் பாதுகாப்பை தொந்தரவு செய்வோர் யாராக இருந்தாலும் சகித்துக்கொள்ள முடியாது. உட்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு மட்டுமே ஒரு நாட்டுக்கு முக்கியமல்ல; பெண்கள் பாதுகாப்பும் முக்கியம்; பெண்களும் குழந்தைகளும் மரியாதையாக வாழ்கிறார்களா என்பதில் ஒரு அரசின் வெற்றி உள்ளது. - சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் விஜய் பேச்சு.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !