by Vignesh Perumal on | 2026-05-11 11:25 AM
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள செல்வி எஸ். கீர்த்தனா, தனது வெற்றிச் சான்றிதழை எடுத்து வர மறந்ததால் அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தமிழக முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) தலைமையிலான புதிய அரசு நேற்று (மே 10, 2026) பதவியேற்றதைத் தொடர்ந்து, இன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அப்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனாவின் பெயர் பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காகப் பேரவையில் அழைக்கப்பட்டது.
மேடைக்கு வந்த கீர்த்தனாவிடம், அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் ஆணையத்தின் அசல் சான்றிதழை பேரவைச் செயலாளர் சீனிவாசன் சமர்ப்பிக்குமாறு கேட்டார். அப்போது அந்தச் சான்றிதழைத் தான் எடுத்து வரவில்லை என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
சட்டமன்ற விதிகளின்படி, ஒரு உறுப்பினர் பதவி ஏற்கும் போது தேர்தல் ஆணையம் வழங்கிய வெற்றிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இதன் காரணமாக, சான்றிதழ் இல்லாமல் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று பேரவைச் செயலாளர் சீனிவாசன் கறாராக மறுப்பு தெரிவித்தார்.
இதனால் சிறிது நேரம் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. சான்றிதழைச் சமர்ப்பித்த பின்னரே அவர் சட்டமன்ற உறுப்பினராக அதிகாரப்பூர்வமாகப் பதவி ஏற்க முடியும் என்பதால், அவர் தற்காலிகமாகப் பதவி ஏற்காமல் இருக்க அறிவுறுத்தப்பட்டார்.
தமிழகத்தின் மிக இளம் வயது அமைச்சர் (29 வயது) மற்றும் விஜய் அமைச்சரவையில் உள்ள ஒரே பெண் அமைச்சர். முதுகலை பட்டதாரியான இவர், சிவகாசி தொகுதியில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுப் புதிய வரலாறு படைத்துள்ளார்.
அமைச்சர் கீர்த்தனா தனது சான்றிதழைப் பேரவைச் செயலாளரிடம் ஒப்படைத்தவுடன், அவர் முறைப்படி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசின் முதல் கூட்டத்தொடரிலேயே ஒரு அமைச்சர் சான்றிதழ் இல்லாமல் வந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
அமைச்சர் கீர்த்தனா..! பதவி ஏற்பில் சிக்கல்...! அனுமதி மறுத்த பேரவைச் செயலாளர்...! பரபரப்பு...!
கொடூரம்...! இரு இளைஞர்கள் எரித்துக் கொலை...! அரை கிலோமீட்டர் இடைவெளியில் சடலங்கள் மீட்பு..!
காவல் நிலைய லாக்கப்பில்...! கைதி தப்பியோட்டம்...! பரபரப்பு...!
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!