by satheesh on | 2026-05-03 07:26 PM
கேரளாவில் மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கிணற்றில் இறங்கி தூர் வாரிய பஞ்சாயத்து பெண் உறுப்பினர்!
இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உப்புத்தரா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மரீனா சனீஷ். உப்புத்தரா கிராம மக்கள் கோடை காலங்களில் குடிநீருக்காக பல மைல் தூரம் செல்ல வேண்டிய நிலையிருந்தது. இதே கிராமத்தில் பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் தோண்டப்பட்ட கிணறு ஒன்று இருக்கிறது. இது நல்ல தண்ணீர் கிணறும் கூட , ஆனால் போதிய பராமரிப்பில்லாமல் வறண்டு இருந்தது. இதையடுத்து இந்தக் கிணற்றை தூர் வார மரீனா முடிவு செய்தார். இதையடுத்து கிராம மக்கள் உதவியுடன் அவர் மட்டுமே தன்னந்தனியாக கிணற்றில் இறங்கி தூர் வாரினார். தற்போது இந்தக் கிணற்றில் குடிநீர் ஊற்று அதிகரித்து தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. இதுகுறித்து மரினா சனீஷ் கூறும்போது, “இந்த 15 அடி ஆழமுள்ள கிணற்றில் வண்டல் மண்ணும், சேறும் நிறைந்திருந்தது. இதையடுத்து கோடை காலத்துக்கு முன்னதாக தூர் வார முடிவு செய்தோம். இதற்கு முன்பு இதை 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தக் கிணற்றை பயன்படுத்தி வந்தனர். முதலில் யாரும் கிணற்றில் இறங்க முன்வரவில்லை. இதையடுத்து நானே இறங்கி சுத்தம் செய்தேன். அதில் இருந்த சேறு, வண்டல் மண் ஆகியவற்றை தூர் வாரி சுத்தப்படுத்தினேன். இயந்திரங்கள் உதவியுடன் சுமார் 4 மணி நேரத்தில் கிணறு சுத்தம் செய்யப்பட்டது. தற்போது கிணற்றில் நல்ல தண்ணீர் ஊற்றெடுக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு கிணற்றில் தண்ணீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என்றார்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !