by admin on | 2026-05-14 12:08 PM
அன்பார்ந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலை சார்ந்த கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .....
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் 2026 -ன் முடிவானது நாம் சார்ந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விடவில்லை .....
மாறாக, ஆளும் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தையும் புரட்டிப்போட்ட தேர்தல் முடிவுதான் மேற்படி 4-ம் தேதி அறிவிக்கப்பட்ட தீர்ப்பாகும்.....
அதைவிட பெருத்த இழப்பு என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியானது தமிழ்நாட்டின் ஆளும் கட்சியாக இருந்தபோதே அதன் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவருமான திரு மு க ஸ்டாலின் அவர்களே சுமார் 9000 த்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்.....
அப்படிப்பட்ட கட்சியில் அவர்களே துவண்டு போகவில்லை .... மாறாக, அவர்களின் கூட்டணி கட்சியினரை தற்போதைய தமிழக அரசுக்கு ஆதரவாக உருவாக்கி ஆளும் கட்சியினரை அவமானத்திற்குள் தள்ளிவிட்டுள்ளது ....
நமது அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் துவண்டு போகக்கூடிய காலமல்ல தற்போதைய காலம் என்பது எதையும் எதிர்த்து மனதைரியத்துடன் போராட வேண்டிய காலத்தில் வாழ்ந்து வருகிறோம் .....
விவசாயிகள் போலஅழுது கொண்டே இருந்தாலும் உழுது கொண்டே இருக்க வேண்டும் .....
வெற்றி, தோல்வி என்பது யதார்த்தமான ஒன்றாகும் .....
அதுமட்டுமின்றி, நமக்கு பதவி ஒரு பொருட்டல்ல .....
நமது கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் ஒவ்வொரு கழக நிர்வாகிகளுக்கும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஆளும் கட்சியாக தலை நிமிர்ந்து நடை போட வேண்டும் என்பது தான் ஆசை .....
ஆனால், தமிழ்நாட்டு மக்கள் ஏனோ விளக்கின் வெளிச்சத்தை பார்த்து செல்கின்ற விட்டில் பூச்சிகள் போன்று த.வெ.க என்ற கட்சிக்கு விசில் அடித்து விட்டார்கள்.....
இது என்னவோ அவர்கள் தெரிந்து செய்த பிழையோ அல்லது தெரியாமல் செய்த பிழையோ என்று விவாதம் செய்யக்கூடிய நேரம் அல்ல .....
நாம் எப்படி விவேகத்துடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீறுகொண்டு செயலாற்ற வேண்டும் என்ற உணர்வோடு விழித்தெழும் காலமாகும் .....
நமக்குள் ஏற்படும் பகைமை உணர்வு எந்த ஒரு சூழலிலும் நம்மை ஒற்றுமையோடும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வோடும் செயல்பட முடியாத அதளபாதாளத்திற்கு தள்ளிவிட்டு விடும்.....
நமது கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பல இன்னல்களை சந்தித்து பல கண்டங்களை தாண்டியபோதும், மீண்டும் மீண்டும் கஷ்டங்களும், கண்டங்களும் தொடர்ந்து அவரை சூழ்ந்து அவரை ஆட்கொள்வது மிகுந்த வேதனையளிக்கும் செயலாகத் தெரியவருகிறது .....
ஆனால் அவரோ சூழ்ச்சி வலைகளில் இருந்து மீண்டு வந்து, மீண்டும் அவர் நெருப்பில் சுட்ட தங்கத்தை போல் தகதகவென ஜொலித்து தான் வருகிறார் .....
அவரின் மனதைரியத்தை கட்டாயம் நாம் பாராட்டி தான் ஆக வேண்டும் .....
ஆனாலும், போதுமடா சாமி இந்த பொதுச் செயலாளர் பதவி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, பரிதவிப்புடன் இருந்து வரும் நமது கழகத்தின் பொதுச்செயலாளர்அவர்களை மட்டுமே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகச் சொல்வது நியாயம் அல்ல, அதே சமயத்தில் அது புத்திசாலித்தனமும் அல்ல.....
ஏனென்றால், தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவு என்பது காட்டாற்று வெள்ளத்தில் கரைபுரண்டு ஓடும் பாறைகள் போல, சூறாவளியில் சிக்கித் தவிக்கும் மரங்களைப் போல விசில் என்ற சின்னத்திற்குள் மக்கள் சிதைக்கப்பட்டும், சின்னாபின்னமாக்கப்பட்டும் அவர்களின் பேரப்பிள்ளைகள், மகன்கள், மகள்கள் மற்றும் மனைவிகள் சொற்களைக் கேட்டுக் கொண்டு யாருக்கு வாக்களிக்கிறோம்? எதற்காக வாக்களிக்கிறோம்?அவர்கள் யாருக்கு, என்ன நன்மை செய்தார்கள்? இவருக்காக ஏன் நாம் வாக்களிக்க வேண்டும்? என்பதை மறந்து விசில் சின்னத்திற்கு வாக்களித்தால் கலைஞரின் மகன் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவார் என்று நம்பி வாக்களித்த மக்களின் தீர்ப்புக்காகவா நாம் நமக்குள் இருக்கும் உறவுகளை, கழகத்தின் கண்மணிகளை பகைமை உணர்வோடு பரிகாசிக்கிறோம் .....
தி.மு.க ஒரு தீயசக்தி, அ.தி.மு.க ஒரு ஊழல் சக்தி என்று நம்மை அசிங்கப்படுத்திய வருக்கா நமது ஆதரவு ?
நமது கழகத்தின் தூணாக விளங்கி வருபவர் நமது பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் .....
சட்டப்பேரவையில் முதல்வர் என்ற பதவியில் அமர்ந்திருக்கும் விஜய் என்பவரை பார்த்து நமது பொதுச்செயலாளர் வணக்கம் வைத்த போது கண்டுகொள்ளாமல் அவமரியாதை செய்த அராஜக செயலில் ஈடுபட்டவருக்கா நமது ஆதரவு ?
மு.க.ஸ்டாலின், உதயநிதி, வை.கோ. அன்புமணி, திருமாவளவன், சீமான், வீரமணி ஆகியோரை சந்தித்து ஆசி பெற்ற அகம்பாவமே இல்லாத முதல்வர் என்று பெயர் கொண்ட ஒருவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் அவர்களை அவமதிக்கும் வகையில் அவரை கண்டு கொள்ளாமல் செயல்பட்டதற்காகவா நமது ஆதரவு வழங்க வேண்டும்?
நாம் நடந்து முடிந்த தேர்தல்களில் என்னென்ன காரணத்தினால் தோல்விகள் அடைந்தோம் என்பதை அறிந்து அதை எவ்வாறு சரி செய்வதுமேற்படி தவறுகள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருப்பதற்கு என்ன வழி என்பது பற்றி சிந்திக்காமல் நம்மை நாமே சிதைக்கும் வழிகளில் செயல்பட்டு வருவது நமது சிந்தையைக் கெடுத்து சீர்குலைக்கும் செயல்கள் அல்லவா.....
இறுதியாக ஒன்றே ஒன்று.....
அனைவரும் ஒன்றுபடுவோம் ..... நமக்குள் பிரிவினை எப்போதும் ஏற்படாது என்பதை உறுதி ஏற்போம் ..... நமக்கான வெற்றி நமது காலடியில் வந்து சேரும் என்ற நம்பிக்கையோடு கழகத்தின் நன்மை கருதி அயராது உழைத்திடுவோம்
வேண்டாம் பி (ரி)ளவு ..... வேண்டும் ஒற்றுமை.....
இவண்,
P. பாண்டியராஜன்
மாவட்ட துணைச் செயலாளர்
(வழக்கறிஞர் பிரிவு)
தேனி (கி) மாவட்டம்
அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு...! போலீஸ் குவிப்பு..?
வீட்டில் மான் கொம்பு...! 72 வயது முதியவர் கைது...! வனத்துறை அதிரடி நடவடிக்கை...!
வேண்டாம் பிளவு வேண்டும் ஒற்றுமை....!!!!
அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்..! வருவாய் நிர்வாகத்துறை ஆணையராக முருகானந்தம் நியமனம்..!
அதிர்ச்சி முடிவு...! எம்.எல்.ஏ காமராஜ் கட்சியிலிருந்து நீக்கம்...! டி.டி.வி. தினகரன் அதிரடி...!