| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு..! இரு வாரங்களில் அமல்...!

by Vignesh Perumal on | 2026-05-12 11:04 AM

Share:


டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு..! இரு வாரங்களில் அமல்...!

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள், தமிழகத்தில் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் சமூக நலனை முன்னிறுத்தி ஒரு மிகமுக்கியமான கொள்கை முடிவை எடுத்துள்ளார். அதன்படி, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் 717 அரசு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட அவர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பிரசாரத்தின் போது போதையற்ற தமிழகத்தை உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் கடைகளின் இருப்பிடம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். அந்த ஆய்வின் முடிவில், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகளை மூட தற்போது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 4,765 டாஸ்மாக் கடைகளில், 500 மீட்டர் சுற்றளவிற்குள் விதிமீறி செயல்படும் 717 கடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு அருகில் உள்ள 276 கடைகள். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள 186 கடைகள். பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் உள்ள 255 கடைகள்.

இந்த 717 மதுபானக் கடைகளும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் (14 நாட்கள்) முழுமையாக மூடப்பட வேண்டும் எனப் பேரவைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, மாணவர்களின் நலன் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் புனிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இந்த முதல் கட்ட அதிரடி நடவடிக்கைக்குப் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மதுக்கடைகளை படிப்படியாகக் குறைப்பதற்கான ஒரு தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment