| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

ADMK எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது தற்கொலைக்கு சமம்...!!! வழக்கறிஞர் பாண்டியராஜன்...

by admin on | 2026-05-30 11:45 AM

Share:


ADMK எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது தற்கொலைக்கு சமம்...!!! வழக்கறிஞர் பாண்டியராஜன்...

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா என்பது தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பாகும்.....

அதிலும்,தமிழக வெற்றிக்கழகத்தில் தங்களை இணைந்திருப்பதும் தண்டவாளத்தில் தானே தலையை வைப்பதற்கு ஒப்பாகும்.....

4 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா என்பது தங்களை நம்பி சீட்டு கொடுத்த கட்சிக்கும், தாங்கள் வெற்றி பெற்று வந்தால் அந்தத் தொகுதியின் மக்கள் வாழ்வு வளம் கொழிக்கும் என்று நம்பியவர்களுக்கும் தாங்கள் வழங்கும் பரிசு இதுதானா.....

இதைத்தான் கட்சியை பிரித்து அமைச்சரவையைக் கைப்பற்ற துடித்தவர்கள் விரும்பினார்களா.....?

ராஜினாமா செய்தால் மட்டும் தாங்கள் எதிர்வரும் இடைத்தேர்தலில் போட்டியிட முடியுமா? அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா? 

அப்படியே இருந்தாலும்,.... உங்களை அதே சட்டமன்றத் தொகுதியில் வாழும் மக்கள் உங்களை நம்புவார்களா.....? 

உங்களை நம்பித்தான் வாக்கு செலுத்துவார்களா.....?

மக்கள் பணி செய்ய வாய்ப்பு அளித்த தமிழக வெற்றி கழகத்திற்கு நன்றி என தெரிவிக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களே.....மக்கள் பணி செய்ய தங்களுக்கு வாய்ப்பு வழங்கி, மகத்தான சேவகனாய் இருந்து வந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்புமிகு பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் உங்களை மக்கள் பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகத்தான் உங்களுக்கு சீட்டு கொடுத்தாரா.....?

உங்களின் சுயநலத்திற்காக, உங்கள் உள்ளங்கையில் இருந்த வெற்றிக் கனியை தூக்கி எறிந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துரோகம் இழைத்து விட்டீர்களே.....?

இது நியாயம் தானா.....?இது தர்மம் தானா.....?

தாங்கள் மட்டுமல்ல. ஏற்கனவே 25 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் சபாநாயகர் அவர்களிடம் புகார் அளித்திருந்ததும் தங்களுக்கு மறந்துவிட்டதா.....? தற்போது மேற்படி கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வழங்கிய புகார் மனுவை வாபஸ் பெற்று விட்டதாலோ என்னவோ ஒவ்வொருவருக்கும் புதிதாக துணிச்சல் பிறந்துவிட்டது.....ஏனென்றால், இனி எவரும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நம்மை தடுத்திட முடியாது என்ற எக்காளத்துடன் எந்த கட்சிக்கு எப்போது தாவலாம்? என்ற நினைப்போடு செயல்பட்டு வரும் கயவர்களாக மாறிவிட்டார்கள்.....அதுமட்டுமின்றி எனது கட்சியின் பொதுச்செயலாளர் அவருக்கே உரித்தான தனித்தன்மையுடன் எவரொருவருக்கும் துன்பம் விளைவித்திடாமலும், நீதிமன்றத்தை அணுகாமலும் இருப்பதால் தானோ என்னவோ ஒவ்வொருவருக்கும் தன்னலம் தலை தூக்கிவிட்டது.....வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களே... தங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவியை விட அமைச்சர் என்ற பதவி தான் ஆளுமை என தெரிகிறது போல.....உண்மையிலேயே தாங்கள் குறைந்தபட்சம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு நீங்கள் தான் தலைமகன் என்பதையும் மறந்து விடாதீர்கள்...அதேசமயம் உங்களை ஆதரித்து உங்களுக்கு சீட்டு வழங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தலைமைக் கழகத்தையும் மறந்து விடாதீர்கள்..... 


இனியும் தாங்காது 

இது போன்ற துரோகிகளையும்... இதுபோன்ற 

எதிர்வாத (Negative )

சிந்தனையாளர்களையும்.....


வாழ்க 

அண்ணா நாமம் !  வளர்க 

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் !


இவண்

P.பாண்டியராஜன்.M.Com.,BL., 

மாவட்ட துணைச் செயலாளர், வழக்கறிஞர் பிரிவு, தேனி (கி) மாவட்டம்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment