by Vignesh Perumal on | 2026-05-14 08:30 PM
வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்ற இந்து எழுச்சி முன்னணி தேனி நகர துணை செயலாளர் திரு ரெங்கராஜ் ஜீ அவர்கள் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து விட்டு பெரியகுளம் செல்லும் புதிய பைபாஸ் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது போடி விலக்கு ரவுண்டானாவை தாண்டி ஆதிபட்டி பாலம் அருகே வந்த போது, ஒரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று மர்ம நபர்கள் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து திடீரென இவர்களின் வண்டியை வழிமறித்து கீழே தள்ளியுள்ளனர்.
அதில் வண்டியில் மூன்றாவதாக இருந்த திருடன், தனது கையில் வைத்திருந்த குறடினால் திருமதி நாகராணி அவர்களின் கழுத்தில் இருந்த சுமார் 7 பவுன் தங்க தாலிக்கொடியை அறுக்க முயன்றுள்ளார். அந்த குறடு கழுத்தில் பட்டதால் கடும் வலியால் அவர் சத்தமிட்டுள்ளார். உடனே அச்சமடைந்த மூன்று மர்ம நபர்களும் இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் செல்லும் பாதை வழியாக தப்பி ஓடி மறைந்துள்ளனர்.
இதையடுத்து சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போடி விலக்கு ரவுண்டானா பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் நடந்த விபரங்களை தெரிவித்து பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து இன்று காலை இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட இணை அமைப்பாளர் திரு செல்வபாண்டியன், தேனி நகர பொருளாளர் திரு நாகராஜ், நகர துணை தலைவர் திரு சிவா ஜீ, நகர செயலாளர் திரு அழகு பாண்டி P.C ஆகியோர் இணைந்து காவல் ஆய்வாளர் திரு ஜெ. மகேஷ் அவர்களிடம் நேரில் சென்று புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
வீரபாண்டி திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு நேரங்களில் குடும்பத்துடன் பயணம் செய்கிற சூழ்நிலையில், பைபாஸ் சாலைகள் மற்றும் பாலம் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் டோல்கேட் நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இரவு நேரங்களில் போதுமான மின் விளக்கு வசதி மற்றும் கண்காணிப்பு கேமரா வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகிறது.
பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசு மற்றும் காவல்துறையின் முதன்மை கடமையாகும். இத்தகைய குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !