by Vignesh Perumal on | 2026-05-12 06:25 PM
தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரிகள் மட்டத்தில் முதல் கட்டமாக முக்கிய இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நிர்வாக ரீதியான பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று (மே 12, 2026) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய என். முருகானந்தம், ஐ.ஏ.எஸ். அவர்கள் வருவாய் நிர்வாகத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தால் இவர் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த எம்.ஏ. சித்திக், ஐ.ஏ.எஸ். அவர்கள் நிதித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி நிர்வாகத்தில் இவருக்குள்ள அனுபவம் கருதி இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 717 மதுபானக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக நந்தகுமார், ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அரசு பதவியேற்ற பிறகு பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முதல் கட்ட இடமாற்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வருவாய் மற்றும் நிதி போன்ற முக்கியத் துறைகளில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.
இந்த இடமாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து பொறுப்பேற்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் சில மூத்த அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !