by satheesh on | 2026-05-23 05:46 PM
தேனி மாவட்டம் : பெரியகுளத்தில் சில்வர் ஜூப்ளிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், அமரர் பி டி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பை காண அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், 21.05.26 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி சாம்பியன் பட்டம் வென்றது.
பெரியகுளத்தில் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதல் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அமரர் பீடி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றது இதில் இந்தியாவின் தலைசிறந்த அணிகளான இந்தியன் வங்கி சென்னை, புதுடெல்லி இந்திய விமானப்படைய அணி கேரளா காவல்துறை அணி, பெங்களூரு கஸ்டம்ஸ் அணி புதுடெல்லி ஓ என் ஜி சி அணி உள்ளிட்ட நாட்டின் தலைசிறந்த அணிகள் பங்கேற்று விளையாடின லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற லீக் சுற்றில் இந்தியன் வங்கி சென்னை, புதுடெல்லி விமானப்படை அணி, புதுடெல்லி ஓஎன்ஜிசி அணி, சென்னை விளையாட்டு விடுதி அணி, ஆகிய நான்கு அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்று இறுதிப் போட்டிகள் வரை முன்னேறின
21.05.26ல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலாவது போட்டியாக இந்திய விமானப்படை அணியும் சென்னை மாணவர் விடுதி அணியும் விளையாடின இதில் புதுடெல்லி விமானப்படை அணி 97 க்கு 79 என்ற புள்ளிக் கணக்கில் புதுடெல்லி விமானப்படை அணி அணி வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்தியன் வங்கி சென்னை அணியும் புதுடெல்லி ஓ என் ஜி சி அணியும் விளையாடின பரபரப்பாக நடந்த இறுதி போட்டியில் இந்தியன் வங்கி சென்னை அணி 84க்கு 62 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று முதலாவது இடத்தையும் ஓ எம் ஜி சி டெல்லி அணி இரண்டாவது இடத்தையும் புதுடெல்லி விமானப்படை அணி மூன்றாவது இடத்தையும் சென்னை விளையாட்டு விடுதி மாணவர் அணி நான்காம் இடத்தையும் பெற்றன.
முதலிடம்லிடம் பெற்ற இந்தியன் வங்கி சென்னை அணிக்கு பிடி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பை மற்றும் ரூ 50,000 பணம் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த டெல்லி ஓஎன்ஜிசி அணிக்கு டாக்டர் செல்வராஜ் வழங்கும் சுழற் கோப்பை மற்றும் 40 ஆயிரம் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த இந்திய விமான படை புது டெல்லி அணிக்கு வி பி தனபால் அவர்கள் வழங்கும் சுழற் கோப்பை மற்றும் 30 ஆயிரம் வழங்கப்பட்டது. நான்காம் இடம் பிடித்த சென்னை விளையாட்டு விடுதி மாணவர் அணிக்கு செல்வ குமார பாண்டியன் நினைவு சுழற் கோப்பை மற்றும் 20000 பரிசு வழங்கப்பட்டது.
அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்ட இந்தியன் வங்கியைச் சேர்ந்த விளையாட்டு வீரர் தணேஸ்வருக்கு ஹீரோ ப்ளஸ்ஸர் ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த நன்னடத்தை அணிக்கான பரிசினை கஸ்டம் பெங்களூர் அணி பெற்றது சிறந்த இளம் விளையாட்டு வீரர்களுக்கான பரிசினை சென்னை விளையாட்டு விடுதி அணியை சார்ந்த ரிஷிகேஷ் பெற்றார். சிறந்த உள்ளூர் விளையாட்டு வீரருக்கான பரிசினை பெரியகுளம் சில்வர் ஜூப்ளி விளையாட்டு கழகத்தை சேர்ந்த ஹரிஷ் பெற்றார். சென்னை மாணவர் விளையாட்டு விடுதி அணிக்கு அதிக புள்ளிகள் பெற்றதற்கான பரிசு வழங்கப்பட்டது. சிறந்த மூன்று புள்ளிகள் குவித்ததற்கான பரிசு புதுடெல்லி விமானப்படை அணியைச் சேர்ந்த ஹுமன் சூ இவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த முறையில் பந்தினை கையாண்டதற்கான பரிசு இந்திய விமானப்படை அணியைச் சேர்ந்த ராகவ் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பயிற்றுநருக்கான விருது சென்னை மாணவர் விளையாட்டு விடுதி அணியைச் சார்ந்த ரமேஷ் ராயர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி விளையாட்டுக் கழக தலைவர் சுவாமி நடேச ஆனந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமை தாங்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கினார். துணைத் தலைவர் அபுதாஹிர் முன்னிலை வகித்தார். தேனி அருண் மோட்டார்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த பாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு பரிசுகளை வழங்கினார். பொருளாளர் டாக்டர் செல்வராஜ் நன்றி உரை கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் சிதம்பர சூரிய வேலு உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார் ,பெரியகுளம். தேனி.
பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் - சென்னை இந்தியன் வங்கி அணி சாம்பியன்.!
அரசியல் வரலாற்றில் முதல் முறையாக...! சட்டமன்றத்தில்...! பொறுப்புகள்...!
தமிழக டிஜிபி பதவிக்கான ரேஸில் 6 பேர் ! மகேஷ் குமார் அகர்வாலை செலக்ட் செய்யப் போகிறாரா? விஜய் !!
வழிமறித்து தங்க தாலி பறிக்க முயற்சி...! அதிர்ச்சியூட்டும் சம்பவம்...!
அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு...! போலீஸ் குவிப்பு..?