| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

அரசியல் அதிகாரத்தை அடித்து நொறுக்கிய பெண் ஐஏஎஸ் அதிகாரி....!!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்.....

by admin on | 2026-11-26 07:27 PM

Share:


அரசியல் அதிகாரத்தை அடித்து நொறுக்கிய பெண் ஐஏஎஸ் அதிகாரி....!!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்.....

அரசியல் அதிகாரத்தை அடித்து நொறுக்கிய  பெண் ஐஏஎஸ் அதிகாரியின் மனவலிமை

 அதீத தைரியம், பொறுமை, பண்பு, நாகரீகம், மனவலிமையால் மக்கள் மனங்களை வென்றார்...!


-மா.பாண்டியராஜ்


ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரியின் துணிச்சலான, நிதானமான, பொறுமையான, திடமான, சரியான அடுத்தடுத்து தான் எட்டு வைத்த நிகழ்வுகளால் இன்று  தமிழகத்தில் அரசியல் அதிகாரம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.bநடந்ததை பற்றி இனி எதுவுமே பேச வேண்டாம். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை திரும்ப, திரும்ப பேசி பெண் மனங்களை சங்கடப்படுத்துவது தவறு. அதேபோல் இனி நடக்கப்போவதை பற்றியும் பேச வேண்டாம். சம்பவம் பற்றிய அத்தனை விஷயங்களையும் சட்ட நிர்வாக அமைப்பு தனது கையில் எடுத்துள்ளது. எனவே நாம் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.  ஆனால் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி, அரசியல் அதிகாரத்தை எப்படி நொறுக்கி தள்ளினார் என்பதை பற்றி பேசியே ஆக வேண்டும்.bஉலக அளவில் நடைபெறும் கடினமான தேர்வுகளில் இந்தியாவில் நடைபெறும் ஐஏஎஸ்., ஐபிஎஸ்., போன்ற உயர் நிர்வாக பணிகளுக்கான பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் தான் முதலிடம் பெற்றுள்ளது. இதனால் இப்படிப்பட்ட படிப்பினை தேர்வு செய்யவே மிகப்பெரிய மனவலிமை தேவைப்படும். வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத கடுமையான உழைப்பினை கொட்டி படிக்க வேண்டும். Bஅதன் பின்னர் பயிற்சி என்ற பெயரிலும் துவம்சம் செய்து விடுவார்கள். இந்த பயிற்சியில் ஒன்று மனதைரியம். அதாவது இந்த படிப்பு படிப்பவர்களின் உடலில் இருந்து பயம், அச்சத்திற்கு காரணமான ஹார்மோனையே பிரித்து எடுத்து விடுவார்கள். அப்படிப்பட்ட கடுமையான ஒரு பயிற்சியை கடந்து வர வேண்டும். அதோடு பண்பு, நாகரீகம், இரக்கம், அன்பு, நிர்வாக திறமை, ஆளுமை, முடிவெடுக்கும் திறன், எடுத்த முடிவில் உறுதியாக நிற்கும் திறன், உணர்ச்சிவசப்படாமல் எந்த ஒரு விஷயத்தையும் அறிவால் சரியான முறையில் அணுகுதல், தனக்கு சரியென பட்டால் அதை செய்ய எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும் என்பதை எல்லாம் பயிற்சியாக கொடுத்து அதில் முழு அளவில் தேர்ச்சி பெற்ற பின்னரே வேலை கொடுப்பார்கள். இவர்களுக்கான பணி நியமன உத்தரவில் ஜனாதிபதியே கையெழுத்து போடுவார்கள் என்றால், இவர்களின் அதிகார உச்ச வரம்பு பற்றி கேள்வி கேட்கவே வேண்டாம். ஆனால் ஒரு துரதிஷ்டம் இந்தியாவில் ஜனநாயகம் என்ற பெயரில் அரசியல் திமிரும், அடங்காமையும், ஊழலும், வன்மமும், லஞ்சமும், இன்னும் சொல்லலாம்... இன்னும் பல கேடு கெட்ட விஷயங்களும் அரசியலுக்குள் புகுந்து விட்டன. இத்தனையும் தாண்டி இந்தியாவில் பல சிறப்பான தலைவர்கள் உருவெடுப்பது தான் இறைவன் நமக்கு கொடுத்த வரம். இப்போது இது நமக்கு வேண்டாம். அரசியல் அடாவடியால் பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரின் மனவலிமை பற்றி இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும். மக்களை பாதுகாக்கும், மக்கள் வாழ்வியலை நிர்வகிக்கும் உயர் அதிகார பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ், அதிகாரிக்கு தனிப்பட்ட வாழ்க்கை முறையில் எத்தனை பெரிய சூறாவளி சுழன்று அடித்துள்ளது.  அப்படி இருந்தும், இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல், குற்றம் சாட்டப்பட்டவரை சமூக மற்றும் சட்ட நெருக்கடியில் சிக்க வைத்து சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கும், அவரது அணுகுமுறை... பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய விஷயம்.  அவர்  எவ்வளவு பெரிய மனஉலைச்சலை சந்தித்திருப்பார், எப்படிப்பட்ட நெருக்கடிகளை சந்தித்திருப்பார். ஆனால் எதற்கும் அவர் அசையவில்லையே.முதன் முறையாக தனக்கு நேர்ந்த சங்கடத்தை பற்றி தனது உயர் அரசு நிர்வாக அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்ற போது, நீங்கள் இது பற்றி பேச வேண்டாம். வேறு மாவட்டத்திற்கு மாறுதலாகி செல்லுங்கள் என்று அவருக்கு அறிவுரை கிடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்த தகவலை கேட்டே தமிழக மக்கள் கொந்தளிக்க தொடங்கி விட்டனர். மக்களை போல் கொந்தளிக்க தொடங்கினார் இந்த நவீன கண்ணகி. அந்தக்காலமாக இருந்திருந்தால், தலைவிரி கோலமாக போர்க்கோலம் பூண்டிருப்பார். இப்போது  மிகவும் நவீனகாலமாக மாறி விட்டதே...  இதனால் காலத்திற்கு ஏற்ப, சாதுர்யமாக பிரச்னையை மெதுவாக கையாண்டார்.  எந்த இடத்திலும் வாய் திறந்து பேசவில்லை. தனது அதிகாரத்தை எள்ளளவும் மீறவில்லை. எவ்வளவோ அதிகார மட்டத்தில் இருந்து சமரசத்திற்கு வந்தும், அசைந்து கொடுக்கவில்லை. தனக்கு நடந்த அநீதிக்கு நீதி வேண்டும். எனக்கே நீதி கிடைக்காவிட்டால், மக்களுக்கு எப்படி நான் நீதி வழங்க முடியும் என்று துணிந்து நின்றார். அறிவுரை என்ற பெயரில் மிரட்டல்கள் கூட வந்திருக்கலாம். அது பற்றி  உறுதியாக தெரியவில்லை.என்ன ஆனாலும், எனக்கு நீதி கிடைக்காவிட்டால், இந்த பதவியை விட்டு மாற மாட்டேன். மாவட்டத்தை விட்டு செல்ல மாட்டேன். என்ன நடந்தாலும், நடக்கட்டும் என்று அவர் துணிந்து நின்றது இன்று தமிழக மக்கள் மத்தியில் அவரை ஒரு வாழும் திரவுபதியாகவும், வாழும் கண்ணகியாகவும் கொண்டு போய் சேர்த்து உள்ளது.சம்பவம்  நடந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்தே விஷயம் வெளிவந்தது. சம்பவம் பற்றி அறிந்த ஒட்டு மொத்த தமிழகமும்  கொந்தளிக்க தொடங்கியது. யாராவது குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றாலோ, சமரசம் செய்ய முயன்றாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஐகோர்ட் சாட்டையை சுழற்றி உள்ளது.

இனிமேல் இந்த விவகாரத்தில் நீதி பின்வாங்க வழியே இல்லை. நீதி தினம், தினம் முன்னேறிச் சென்று, குற்றவாளியை நிச்சயம் தண்டிக்கும். கிட்டத்தட்ட ஒரு ஐஏஎஸ் அதிகாரி... மிக, மிக பவர்புல் பதவி, மிகப்பெரிய நிர்வாக தொடர்புகள் அத்தனை இருந்தும் இவரது நிலையே இப்படி என்றால், சாதாரண பெண்களின் நிலை, பாமரர்களின் நிலை என்ன என்பதை நினைத்தால் மனம் பதறுகிறது என கோர்ட்டே இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்துள்ளது அரசியல் அதிகாரத்தின் பவரை தெளிவுபடுத்தி  உள்ளது.

கவர்னர்,  மத்திய உள்துறை அமைச்சர்... என இந்தியாவின் உச்ச அதிகாரங்களும் இந்த பிரச்னையை நேரடியாக கவனிக்கிறார்கள் என்பது தெரிந்தும்... நீதி தனது பாதையில் நிதானமாகவே நகர்கிறது. நிதானமாக நகர்ந்தாலும், நீதி வெல்லும்... இந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியின் துணிவும், மனவலிமையும் மக்களால் என்றென்றும் கொண்டாடப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


T. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர்  9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment