by Vignesh Perumal on | 2026-03-31 05:58 PM
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு மது மற்றும் பணம் விநியோகிப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பறக்கும் படையினர் சோதனையை வலுப்படுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த அரவங்குறிச்சி அருகே உள்ள மங்களப்பட்டி - செங்குறிச்சி சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்துச் சோதனையிட்டனர். அப்போது ஒரு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 106 மதுபாட்டில்களை அதிகாரிகள் கண்டறிந்தனர். உரிய ஆவணங்கள் இன்றியும், தேர்தல் விதிகளுக்குப் புறம்பாகவும் அதிக அளவில் மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டதால், அவற்றை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 106 மதுபாட்டில்களும் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த மதுபாட்டில்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டதா? அல்லது சட்டவிரோத விற்பனைக்காகவா? என்பது குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நத்தம் சட்டமன்றத் தொகுதி மலைக்கிராமங்களையும், குக்கிராமங்களையும் அதிகம் கொண்ட பகுதி என்பதால், அங்குள்ள முட்டுச் சாலைகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
"தேர்தல் நேரத்தில் மது மற்றும் பரிசுப் பொருட்களைப் பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !