by satheesh on | 2026-03-31 02:40 PM
பதவியை எதிர்பார்த்து போட்டியிடுகிறாரா திருமாவளவன்?
திருமாவளவனின் முடிவுக்குப் பின்னால், நீண்ட காலக் கணக்கீடுகள் இருக்கின்றன என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார். "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோக வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதனை மாநில அரசியலில் இருந்தபடிதான் செய்ய வேண்டும் என நினைக்கிறார் தலைவர். ஆகவே, கட்சியின் எதிர்கால வளர்ச்சி கருதி இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். இரண்டாவதாக, விஜயின் புதிய கட்சி களத்தில் இறங்கியிருக்கிறது. அதன் உண்மையான செல்வாக்கு என்ன என்பது இந்தத் தேர்தலில்தான் தெரியவரும். ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளில் சொல்லப்படுவதைப்போல, 15 சதவீதம் அந்தக் கட்சிக்குக் கிடைத்தால், தேர்தலுக்குப் பிறகு கூட்டணி மாற்றங்கள் (Realignment) உருவாகலாம். அந்தத் தருணத்தில் பா.ஜ.க. தமிழ்நாட்டில் தீவிரமாக கால்பதிக்க முயலலாம். பல மாநிலங்களில் அவர்கள் அதனைச் செய்திருக்கிறார்கள். அப்போது எங்கள் கட்சியின் செல்வாக்கை பாதுகாக்க வேண்டியிருக்கும். அதற்கு இங்கே ஒரு தளபதி தேவை. அதனால்தான் திருமாவளவன் இங்கே செயல்பட முடிவெடுத்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டும் இங்கே செயல்படலாம் என்றாலும் முழுமையாக அவரது கவனத்தை இங்கே குவிக்க வேண்டும். அதற்காகவும் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட முடிவு செய்திருக்கிறார். மூன்றாவதாக, என்னைப் பொறுத்தவரை ஆளும் கூட்டணியைத் தவிர, எந்தக் கட்சியிலும் தற்போது ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. அ.தி.மு.க. தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை. இந்தச் சூழலில், வரவிருக்கும் சட்டப்பேரவையில் அவருக்கு என ஒரு முக்கிய இடம் இருக்கும். அவருடைய செயல்பாடு கட்சியின் நற்பெயரையும் அதிகரிக்கும். அதற்காகத்தான் இப்போது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார் திருமாவளவன். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை 180 இடங்களைப் பெறும். தொங்கு சட்டமன்றத்திற்கான சாத்தியமே இல்லை. ஆகவே ஏதோ பதவியை எதிர்பார்த்து இதுபோல போட்டியிடுவதாகச் சொல்வது தவறு."
எனது நீண்டகால ஆசை.! மனம் திறந்த திருமா ...!!
சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு நீண்டகாலமாக உண்டு. நாடாளுமன்றத்தில் என்ன பேசினாலும் தமிழ்நாடு சட்டமன்றம்தான் தமிழ்நாட்டின் முகம். அமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை, MLAவாக இருந்தாலே போதும்._– காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !