by Vignesh Perumal on | 2026-03-31 01:11 PM
திண்டுக்கல் அனுமந்த நகர் பகுதியில் வீடு கட்டும் பணியின் போது ஏற்பட்ட சிறு மனக்கசப்பு, வன்முறையில் முடிந்து தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் அனுமந்த நகரைச் சேர்ந்த ஜெயக்குமார். இவர் கொத்தனார் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராஜ் (36). வெங்கட்ராஜின் வீட்டில் ஜெயக்குமார் அண்மையில் கொத்தனார் வேலை செய்துள்ளார். அப்போது வீட்டின் வெளிப்புறப் பூச்சில் சிறு விரிசல் (கீறல்) விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைச் சரிசெய்து தருமாறு வெங்கட்ராஜ் பலமுறை ஜெயக்குமாரை அழைத்துள்ளார். ஆனால், வேறு வேலைகளில் பிஸியாக இருந்ததால் ஜெயக்குமார் உடனடியாக வரவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், இன்று ஜெயக்குமார் தனது வேலை நிமித்தமாக மாலப்பட்டி ரோடு, பசுமை நகர் அருகே சென்று கொண்டிருந்தார்.
அங்கு வந்த வெங்கட்ராஜ், ஜெயக்குமாரை மறித்து வேலைக்கு வராதது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த வெங்கட்ராஜ் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து ஜெயக்குமாரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். "இனிமேல் இந்தப் பக்கம் வந்தால் உயிரோடு விடமாட்டேன்" எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
காயமடைந்த ஜெயக்குமார் இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த வெங்கட்ராஜை (36) அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறு விரிசல் போன்ற உள்கட்டமைப்புப் பிரச்சினைகளைத் தொழில்முறை ரீதியாக அணுகாமல், வன்முறையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும் எனத் தாலுகா போலீஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !