by Vignesh Perumal on | 2026-03-30 01:04 PM
திண்டுக்கல் அடுத்த பொன்னிமாந்துறை பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் இளம்பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னிமாந்துறை, MGR நகரில் வசிக்கும் முருகபாண்டி என்பவரின் மனைவி அமுதா (24).
அமுதாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பப் பிரச்சினை காரணமாகத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அமுதா, இன்று அதிகாலை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் வனராஜன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தில் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
அமுதாவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், அதைக் கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான துல்லியமான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமாகி சில ஆண்டுகளே ஆவதால், இந்தத் தற்கொலை தொடர்பாக வரதட்சணை கொடுமை அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து ஆர்டிஓ (RDO) விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், தமிழக அரசின் இலவச உதவி மைய எண் 104 அல்லது 'சினேகா' தற்கொலை தடுப்பு மைய எண் 044-246400502ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !