by satheesh on | 2026-03-29 06:30 PM
"இங்கே தப்பான தொழில் நடக்குறதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு"- மிரட்டிய போலீசார்; ரூ. 10 ஆயிரம் கொடுத்து சரிக்கட்டிய பியூட்டி பார்லர் ஊழியர்கள்..!
களவாணி காக்கிகளை கம்பி எண்ண வைத்த காக்கி : நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை பெண் ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது காவலர் சீருடையில் வந்த 2 பேர் அழகு நிலையம் முன்பாக நின்றுள்ளனர் அவர்களில் ஒருவர் திடீரென உள்ளே புகுந்து, அங்கிருந்த பெண் ஊழியர்களிடம், "இங்கு சட்டவிரோத செயல்கள் நடப்பதாகப் புகார் வந்துள்ளது; நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமென்றால் ரூ.10 ஆயிரம் தர வேண்டும்" என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர்கள் அழகு நிலையத்தில் இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்து கொடுத்தார்களாம். அந்த பணத்தைப் பெற்றுக்கொண்ட போலீசார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்கள். இதுகுறித்து ஊழியர்கள் அழகு நிலைய உரிமையாளருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அழகு நிலையத்துக்குள் புகுந்து அத்துமீறி பெண்களை மிரட்டி பணம் பறித்தவர்கள் தேர்தல் பணிக்காக நெல்லை மாவட்டத்திற்கு வந்த பட்டாலியன் போலீசார் என்பதை கண்டறிந்தனர். போலீசார் இரண்டு காவலர்களையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் (வயது 34), நெல்லை செந்தில்நகரைச் சேர்ந்த சேதுபதிராஜா (27) என்பதும், மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நெல்லை வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அத்துமீறி நுழைதல், பெண்ணின் கண்ணியத்திற்குப் பாதகம் விளைவித்தல், பணம் பறித்தல் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன 2 போலீசாரையும் அதிரடியாகக் கைது செய்தனர். தவறு செய்த போலீசாரை காப்பாற்ற முயற்ச்சி செய்யாமல் நேர்மையாக வழக்கு பதிவு செய்து கைது செய்த திரு முத்து கணேஷ் காவல் ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மேகமலை வன சரணாலயம் மலைவாழ் மக்கள் குறித்து CPM மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி...???
உலக தாய்ப்பால் வார விழா பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.....!!!
மேகமலை மலை கிராம மக்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முற்றுகை...!!! போராட்டம் தீவிரம்....!!!"
தேனி கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு....!!!!!
, பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்....