by satheesh on | 2026-03-29 05:44 PM
மாணவி கொலை வழக்கு: டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள்: குற்றவாளிக்கு எதிராக ஆதாரம் உறுதி !
விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி கொலை வழக்கில், டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. இது, கைதான நபரின் மிக முக்கியமான மற்றும் வலுவான ஆதாரமாகக் கருதப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சம்பவ இடத்தில் இருந்து மாணவியின் ஆடை மற்றும் உடல் பகுதிகளில் இருந்த பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, டி.என்.ஏ. (DNA) பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த அறிவியல் பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட தர்மமுனீஸ்வரனின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தடயங்களுடன் ஒப்பிடப்பட்டன. தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், தர்மமுனீஸ்வரனின் டி.என்.ஏ.வும், சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளும் நூறு சதவீதம் ஒத்துப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தர்மமுனீஸ்வரன் தான் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டார் என்பதற்கான மறுக்க முடியாத அறிவியல் ஆதாரத்தை போலீசார் திரட்டியுள்ளனர். இந்தத் தகவல் வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளதோடு, குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !