by Vignesh Perumal on | 2026-03-29 02:43 PM
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பழனி சட்டமன்றத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படாமல், மீண்டும் அதிமுகவுக்கே ஒதுக்கப்பட்டிருப்பது உள்ளூர் பாஜகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி பகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் பழனி வழியாகச் சென்றபோது, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது வாகனத்தை வழிமறித்துச் சிறைபிடித்தனர்.
"பழனி தொகுதி பாஜகவுக்கே", "அதிமுகவுக்கு தாரை வார்க்காதே" போன்ற முழக்கங்களை எழுப்பிய தொண்டர்கள், சாலையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் பழனி தொகுதி அதிமுக வேட்பாளருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகப் பழனி தொகுதியில் பாஜக தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இத்தொகுதியில் பாஜக போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்றும் அக்கட்சியினர் நம்பினர்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது இத்தொகுதியை பாஜக மேலிடம் கேட்டுப் பெறத் தவறிவிட்டதாகக் கூறி, தொண்டர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
வாகனம் சிறைபிடிக்கப்பட்டதால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாகப் போலீஸார் தலையிட்டுத் தொண்டர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
வாகனத்தில் இருந்து இறங்கிய அமைச்சர் எல்.முருகன், தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். "கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தொகுதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இருப்பினும் சமாதானம் அடையாத தொண்டர்கள், இது குறித்து பாஜக மாநிலத் தலைமைக்கும், தேசியத் தலைமைக்கும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மனு அளித்துள்ளனர்.
பழனி தொகுதியில் ஏற்கனவே திமுக வலுவாக உள்ள நிலையில், கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதல் தேர்தல் களத்தில் யாருக்குச் சாதகமாக அமையும் என்ற விவாதம் திண்டுக்கல் மாவட்ட அரசியலில் எழுந்துள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !