by Vignesh Perumal on | 2026-03-29 12:59 PM
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டி புதூர் பகுதியில் அமைந்துள்ள புனித சலேத் மாதா திருத்தலம், இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமாகும். பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் காட்சியளித்த மாதாவின் நினைவாக இக்கோவில் நிறுவப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தலத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணிகளுக்காகவும், தரைத்தளம் சீராக இருக்கவும் பட்டியக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இன்று காலை (மார்ச் 29, 2026) வழக்கம்போலப் பிரார்த்தனைக்காக வந்த பக்தர்கள், ஒரு குறிப்பிட்ட இடத்தில் கற்களுக்கு இடையே சிறிய அளவில் தண்ணீர் கசிவதைக் கண்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் அந்த இடத்தில் ஊற்று போலத் தண்ணீர் மெல்ல மேலெழத் தொடங்கியது. வறண்ட நிலப்பரப்பில், திடீரெனக் கற்களுக்கு அடியில் இருந்து தண்ணீர் கசிவது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவல் காட்டுத்தீ போலப் பரவியதையடுத்து, மறவபட்டி புதூர் மட்டுமின்றி தாடிக்கொம்பு, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் நகர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் திருத்தலத்திற்குப் படையெடுத்து வருகின்றனர்.
மறவபட்டி புதூர் திருத்தலத்தில் உள்ள சலேத் மாதா சுரூபமானது, பிரான்ஸ் நாட்டின் லா சலேத் திருத்தலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பெருமைக்குரியது. பிரான்சில் மாதா காட்சியளித்த போது அங்கேயும் ஒரு புனித நீரூற்று தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதே போன்ற ஒரு நிகழ்வு இங்கும் நடந்துள்ளதாகப் பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் வரிசையில் நின்று இந்த நீரூற்றைத் தரிசனம் செய்து வருகின்றனர். சிலர் அந்தப் புனித நீரைத் தெளித்துக் கொண்டு பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.
நிலத்தடி நீர் மட்டம் உயர்வு காரணமாக இந்த ஊற்று ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் இயற்கை நிகழ்வா என்பது குறித்து அப்பகுதி மக்கள் விவாதித்து வருகின்றனர். இருப்பினும், பங்குத் தந்தை மற்றும் திருத்தல நிர்வாகிகள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
கோடைக்காலம் தொடங்கி வெயில் அதிகரித்து வரும் வேளையில், தரைப்பகுதியில் இத்தகைய நீரூற்று தோன்றியது ஒரு தெய்விகச் செயலாகவே இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !