by Vignesh Perumal on | 2025-03-19 02:10 PM
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூபாய் 1500 உதவித் தொகையை 3000 ஆக மாற்றக்கோரி உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17ஆம் தேதி காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.
குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையர வளாகத்தில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் மாலையில் போலீசார் இவர்களைக் கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இறக்கி விடுவதும் அங்கிருந்து மறுபடியும் இவர்கள் புறப்பட்டு வந்து போராட்டத்தைத் தொடர்வதுமாக உள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே இன்று மூன்றாவது நாளாக தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதே நிலையில் போராட்டம் தொடரும் எனில், வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் எங்களுடைய வாக்கினை நாங்கள் ஆயுதமாக பயன்படுத்துவோம் என்பதில் எவ்வித கருத்தும் இல்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
குழந்தையை கடத்தியவருக்கு காலில் எலும்பு முறிவு....!!!
முப்படை வீரர் கொடி நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேனீ கலெக்டர்...!!!
பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டாம் இடம் பெற்ற திரவியம் கல்லூரி மாணவர்கள் ...!!!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!