by satheesh on | 2026-03-14 07:43 PM
ஆண்டிபட்டி அருகே சிறுத்தை நடமாட்டம் ? அச்சத்தில் பொதுமக்கள் !
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மலையடிவார பாலக்கோம்பை கிராமத்தில் சிறுத்தை புலி தாக்கி 7 ஆடுகள் பலி. நள்ளிரவில் ஆட்டுமந்தைக்குள் புகுந்த சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்றதால் கிராம மக்கள் அச்சம் . உடனடி நடவடிக்கை எடுத்து சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்க நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயத்தோடு சேர்த்து தங்களது தோட்டத்திலேயே ஆடு மாடு கோழிகளை வளர்த்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் வழக்கம்போல் தன் வேலையை முடித்துவிட்டு பாலக்கோம்பை கிராமத்தில் உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்வுக்காக குடும்பத்தினருடன் சென்று விட்டார். காலையில் தனது தோட்டத்திற்கு திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டுக் கொட்டைகையில் இருந்த 11 ஆடுகளில் ஏழு ஆடுகள் கழுத்து வயிறு உள்ளிட்ட இடங்களில் காயம்பட்டு ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து தோட்ட உரிமையாளரான ஆண்டவர் என்பவருக்கும் வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை மற்றும் காவல் துறையினர் பலியான ஆடுகளை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கால்நடை மருத்துவர் மூலமும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத மழையடிவார தோட்டத்தில் புகுந்தது சிறுத்தை தான் என அச்சம் தெரிவிக்கும் தோட்ட உரிமையாளர் ஆண்டவர் . சிறுத்தை நடமாட்டத்தையும் , மனித உயிர்கள் பலியாகும் முன்பு உடனே கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூலித்தொழிலாளியான ஜோதிக்கு ஆடு இழப்பிற்கான உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !