by satheesh on | 2026-03-14 06:38 PM
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் : கேரள அரசு அந்தர் பல்டி!
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்த தனது முந்தைய நிலைப்பாட்டை கேரள மாநில அரசு மாற்றியுள்ளது. மத பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதை வலியுறுத்தும் அதன் புதிய நிலைப்பாட்டை கேரள அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் முறையாக அறிவிக்க உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்ட நிலையில், இறுதி முடிவு இடது ஜனநாயக முன்னணி தலைவர்களுடன் பேசி முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. CPM தலைமைக்கும், அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் இடையிலான ஆலோசனைகளைத் தொடர்ந்து, அரசாங்கம் இந்தக் கொள்கை திருத்தத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. முந்தைய தேர்தல் பின்னடைவுகள் மற்றும் அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாட்டை கடுமையாக விமர்சிக்கும் பாஜகவின் சாடல் களுக்கு பிறகு அரசியல் விளைவுகளைத் தணிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது. மேலும் இந்த நடவடிக்கை மூலம் வரும் தேர்தலில் கம்யூனிஸ்ட் அரசிற்கு ஆதரவு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!