by satheesh on | 2026-03-15 09:11 AM
அதிமுக 80 தொகுதிகளில் டெபாசிட் இழக்குமாம்! லயோலா கணிப்பில் பகீர்! எடப்பாடிக்கு எதிராக பூகம்பம் ரெடி?
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக 80 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக் கணிப்பில் குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எந்த ஒரு தேர்தலிலும் பெரிய அளவிலான வெற்றியை பெறாத அதிமுக, வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் போராடி வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தனர். அதன் முடிவுகள் இன்று வெளியாகியிருந்தன. அதில் அடுத்த முதல்வர் யார், இளைஞர்கள் விரும்பும் தலைவர் யார், எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் தவெகவுக்கு 50 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அது போல் 80 தொகுதிகளில் அக்கட்சி இரண்டாவது இடத்தையும் பெறுமாம். அது போல் 80 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழக்கும் என அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இது அதிமுக தொண்டர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கருத்து கணிப்புகள் இல்லை, கருத்து திணிப்புகள் என முடிவுகள், தங்களுக்கு சாதகமாக வராத அரசியல் கட்சியினர் சொல்வதுண்டு. ஆனால் இது போன்ற கருத்துக் கணிப்புகள் தொண்டர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. 80 தொகுதிகளில் டெபாசிட் இழந்து, முதல்வர் ரேஸில் 3 ஆவது இடத்தில் எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார் என்பது பெரும் அதிர்ச்சியாகவே கருதப்படுகிறது.
இதுவரை பழனிசாமி சந்தித்த தோல்விகள் :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்ற ஒற்றைத் தலைமையின் கீழ் வெற்றிகளைக் குவித்து வந்த அதிமுக, அவரது மறைவுக்குப் பிறகு சந்தித்த தேர்தல் தோல்விகள் அக்கட்சியின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் :
ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல், அதிமுக-விற்குப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஆளுங்கட்சியாக இருந்தும், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட டி.டி.வி. தினகரனிடம் அதிமுக தோல்வியைத் தழுவியது. இது கட்சியின் ஒருங்கிணைப்பில் இருந்த விரிசலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் :
2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக களம் கண்டது. தமிழகத்தின் 39 தொகுதிகளில் தேனி தொகுதியில் மட்டும் (ஓ.பி. ரவீந்திரநாத்) வெற்றி பெற்று, மீதமுள்ள 38 இடங்களிலும் படுதோல்வியைச் சந்தித்தது. இது ஜெயலலிதா இல்லாத அதிமுக-விற்கு மக்கள் அளித்த முதல் பெரிய தேர்தல் பாடம்.
உள்ளாட்சித் தேர்தல்கள் (2019, 2021) :
2019-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2021-ல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக தனது கோட்டை என்று சொல்லப்பட்ட கொங்கு மண்டலத்திலும், தென் மாவட்டங்களிலும் கூட பல இடங்களைப் பறிகொடுத்தது. 2021 சட்டமன்றத் தேர்தல் - ஆட்சி இழப்பு பத்தாண்டு கால ஆட்சியைத் தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் களம் இறங்கிய அதிமுக, 66 இடங்களை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தது. எதிர்க்கட்சி வரிசைக்குத் தள்ளப்பட்டாலும், வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சியைத் தக்கவைக்க முடியாமல் போனது பெரிய பின்னடைவே. 2024 நாடாளுமன்றத் தேர்தல பாஜக கூட்டணியிலிருந்து விலகி, தனித்துக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. 2021 இல் ஒரு இடத்திலும் டெபாசிட் இழக்கவில்லை - ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எத்தனை தோல்விகளை சந்தித்துள்ளது என்பது குறித்து அப்போது அதிமுகவை ஒருங்கிணைப்பதாக கூறி வந்த ஓபிஎஸ், சசிகலா, புகழேந்தி உள்ளிட்டோர் கூறி வந்தனர். இந்த நிலையில் இந்த முறையும் அதிமுக ஆட்சியை பிடிக்காவிட்டால் நிச்சயம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சியில் ஒரு பூகம்பம் வெடிக்கும் என்றே தெரிகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு இடத்தில் கூட டெபாசிட் காலியாகும் அளவுக்கு அதிமுக தோல்வி அடையவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 7 இடங்களில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. எனவே, இந்தத் தேர்தல் அதிமுகவிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவினர் முழு அளவில் தேர்தல் பணி செய்தால் மட்டுமே அதிகப்படியான இடங்களை தக்க வைக்க முடியும் என கூறப்படுகிறது. எது எப்படியோ, அதிமுகவிற்கு இந்த தேர்தல் கடும் சவாலாகவே கருதப்படுகிறது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் ? கேரள அரசு அந்தர் பல்டி!
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆய்வு!
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கொள்ளையடிக்கப்படும் வன வளங்கள் அதிர்ச்சி ! நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!