by satheesh on | 2026-03-13 07:43 AM
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் : முன்னாள் எம்எல்ஏ எச்சரிக்கை.!
கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல அரசே நிறைந்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் சென்று கொண்டிருக்கிறது. இதை எந்த அதிகாரியும் தட்டிக் கேட்பதில்லை இந்து நிலை நீடிக்குமாயின் விரைவில் அவர்கள் கூண்டில் ஏற்றப்பட்டு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கத் தலைவருமான கே.ரவி அருணன் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: கிராம சாலைகளில் மிகவும் கனரக வாகனங்களை இயக்கக் கூடாது என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதற்கு எந்த அதிகாரிகளும் செவிசாய்க்கவில்லை. தற்போது இயற்கை வள பாதுகாப்பு சங்க செயலாளர் ஜமீன் தகவல் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு இணங்க சில தகவல்களை அதிகாரிகள் கொடுத்துள்ளனர். கிராம சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், மாவட்டச் சாலைகள், நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் ஹைவே என்று சாலைகள் வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ச சாலைகளிலும் எத்தனை டன் எடை கொண்டு செல்லலாம் என்று பொதுமக்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலை விதிகளும் போக்குவரத்து விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிராமச் சாலைகளில் கனரக வாகனங்கள் இயக்க வேண்டும் என்றால் அந்த சாலை எவ்வளவு அகலம் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் எல்லாம் உள்ளன. தற்போது கிராம சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லும் பொழுது பொதுமக்கள் சாலை விட்டு கீழே இறங்கி தான் அதற்கு வழி விட வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்து வருகின்றது. பல இடங்களில் இதனால் விபத்து ஏற்பட்ட வரலாறுகளும் உள்ளன. ஆனால் இங்கே உள்ள அதிகாரிகள் பொதுமக்களுடைய நலனை கருத்தில் கொள்ளாமல் மிக கனரக வாகனங்களை தொடர்ந்து கிராமச் சாலைகளில் இயக்கி வருகின்றனர். ஒவ்வொரு குவாரியிலிருந்தும் கனரக வாகனங்களில் சுமார் 60 டன் வரை கனிமங்களை ஏற்றி செல்கின்றனர். அதற்கு கனிம வளத்துறை அதிகாரிகளும் குவாரியில் இருந்து கேரளா வரை செல்ல அதற்கு அனுமதி சீட்டும் வழங்குகின்றனர். சட்டத்தில் இடமில்லாமல் கனிமவளத்துறை 60 டன் ஏற்ற அனுமதி அளிக்கிறது? அதை கண்காணிக்க வேண்டிய போக்குவரத்து துறை அதிகாரிகளும் உள்ளாட்சி அதிகாரிகளும் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்ல நாங்கள் தடை செய்ய முடியாது என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகின்றது. கிராம சாலைகளில் அதிக எடையை ஏற்றி செல்வதை கட்டுப்படுத்தினாலே தமிழகத்தின் இயற்கை வளம் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லாமல் பாதுகாக்கப்படும். தொடர்ந்து இதே போன்று அதிகாரிகள் செயல்படுவதை நிறுத்தாவிட்டால் மாவட்ட நிர்வாகம் இதை கண்டிக்காவிட்டால் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக விரைவில் அனைத்து அதிகாரிகளையும் கூண்டில் ஏற்றி இயற்கை வளம் பாதுகாப்பு சங்கம் கேள்விகளை எழுப்பும் என்று எச்சரிக்கின்றோம் - கே ரவி அருணன், தலைவர், இயற்கை வள பாதுகாப்பு சங்கம் ,தென்காசி.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரிய குளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!
பெரியகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி ! இரு தரப்பு மோதல் - பரபரப்பு !! திமுக நிர்வாகி உட்பட 5 பேர் !கைது !!